ஆத்திர அவசரத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் ஒன்று தான் இந்த தற்கொலை! அது என்ன தேங்காய் சட்னி செய்வது போல் அத்துணை சுலபமா?? தற்கொலை செய்ய முடிவெடுத்தவுடன் என்ன செய்யணும் என்று கூட சத்தியமாக எனக்கெல்லாம் தெரியாது! ஏதோ திரைப்படங்களை பார்க்க போய் , தூக்கு மாட்டி கொள்வது , தூக்க மாத்திரை சாப்பிடுறது , கையில் நரம்பை வெட்டி கொள்வது , மலை உச்சிக்கு சென்று குதிப்பது , நம் வாகனத்தை வேகமாக ஓட்டி சென்று எதிரே வரும் வாகனம் மீது மோத விடுவது, பூச்சி மருந்து , காலாவதியான மருந்து , பாத்ரூம் கிளீனர் , ஆசிட் ஆகியவற்றை குடிப்பது , நம்மை நாமே மண்ணென்னை ஊற்றி கொளுத்தி கொள்வது , ஆழமான நீர் நிலைகளில் சென்று விழுந்து உயிரை விடுவது போன்ற வழிகள் அரை குறையாய் தெரியும்! இப்படி அரைகுறையாக தெரிந்து கொள்வது தான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு… வாழ்க்கையை வாழ வழி தெரியாதோர் , சாவை அடைய வழி தேடுகின்றனர்! இத்தகைய மன நிலையில் உள்ளவரிடம் போய் .. ஏ.. பிளீஸ் பா.. தற்கொலை எல்லாம் செய்யனும்னு நினைக்காத.. அப்படி இப்படின்னு அறிவுரை கொடுத்தால் எல்லாம் வேலைக்கு ஆகாது! வாழ்க்கையை வாழ பயந்தவர்களுக்கு சாவின் மீது பயத்தை குடுக்க வேண்டும் .. அத்தகைய விழிப்புணர்ச்சியை மக்கள் மனதில் உண்டாக்கவே இந்த மிரட்டல் பதிவு! வேறு எந்த நோக்கமும் இல்லை !
தற்கொலை செய்து கொண்டால் வலி தெரியாம மேல போய் சேர்ந்துடலாம்னு யாரு சொன்னா?? உங்களுக்கு ஒன்னு தெரியுமா நாமே நம் கைகளால் கழுத்தை நெறித்து நம்மை நாமே கொன்று விட இயலாது! அது போல் மூச்சு விட முடியாதபடி நம் மூக்கை நாமே இறுக்கி பிடித்தால் மூர்ச்சை ஆகி விடுவது என்னவோ உண்மை தான்.. ஆனால் சிறிது நேரத்தில் நாம் நம்மை அறியாமலேயே சுவாசிக்க ஆரம்பித்து விடுவோம்! அது எப்படி சாத்தியம் என்று வியப்பவர்களுக்கு ஒரு எடுத்துகாட்டு கூறுகிறேன்.. நாம் இரவில் தூங்கும் போது நம்மை நறுக் என்று கடித்த கொசுவை தூக்கத்திலேயே நம் கைகளால் அடித்து விரட்டுவோம் அல்லவா அதே போல் தான் இதுவும் ! நம் உடம்பு எப்பவும் விழிப்பா இருக்கும்.. அவ்வளவு சுலபமாக நாம் நம் உடம்புக்கு எந்த வித தீங்கும் செய்ய இயலாது!!
நம்ம மனித உடம்பை எப்படி வடிவமைத்து இருக்கிறார்கள் என்பதை மட்டும் நீங்கள்அறிந்தால் அசந்து போவீர்கள் போங்கள்! எந்த தருணத்திலும் நம் மனித உடம்புக்கு உடனே சாவை தழுவி கொள்ள விருப்பமே கிடையாது… எவ்வளவுக்கு எவ்வளவு தன்னை தானே பாதுகாத்து கொள்ள முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு நம் உடம்பும் ,நம் மனதும் விழிப்பாக இருந்து நம்மை காக்கும்! ஒரு உதாரணத்துக்கு , உங்களை நீங்களே மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்து கொள்ளுகிறீர்கள் என்று வையுங்கள் என்ன நிகழும் தெரியுமா?? உங்கள் உடம்பு உடனடியாக தாயின் கருவறை உள்ளே சுருண்டு இருக்கும் குழந்தை போல் சுருண்டு கொள்ளும்! எதற்காக நம் உடம்பு , இவ்வாறு சுருண்டு கொள்கிறது என்றால் நம் உடம்புக்கு தீயினால் பலத்த சேதம் உண்டாகாமல் தவிர்ப்பதற்காக ! இந்த சுருண்ட நிலையை வைத்து தான் காவலர்கள், தீயினால் கொளுத்தப்பட்டவர் , கரியாவதற்கு முன் உயிரோடு இருந்தாரா இல்லை உயிரோடு கொளுத்தப்பட்டாரா என்பதை அறிந்து கொள்வர்!
அடுத்து பதிய போகும் விஷயங்கள் அனைத்தும் உலகில் உள்ள ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்! எல்லோருக்கும் வாழ்வில் பிரச்சனைகள் வரும் போகும்… பிரச்சனைகளை கண்டு பயந்து சாவை அடைய வழி தேடுபவர்கள் முதலில் அவ்வழிகள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து அறிவது அவசியம்! அவ்வாறு அறியும் போது மட்டுமே அவர்கள் தேர்ந்தெடுத்த வழி கடினமானதா இல்லையா என்பது புரிய வரும் !
துப்பாக்கி மூலமாக தற்கொலை
துப்பாக்கி மூலமாக உயிரை மாய்த்து கொள்ள விரும்புபவர்கள் எல்லோரும் சினிமாவில் காட்டுவது போல் ,துப்பாக்கி வெடித்தவுடன் செத்து போனதாக சரித்திரம் இல்லை! ஒன்று கோமா நிலைக்கு தள்ளப்படுவர் இல்லையெனில் மனநிலை சரி இல்லாது போவர்.. அது ஏனெனில் என்ன தான் நாம் எப்படியாவது துப்பாக்கியை வாயினுள் வைத்து, வெடித்து ,பொட்டுனு போயிடனும் என்று ஆசைப்பட்டாலும் நாம் நினைப்பது மாதிரியே எல்லாம் நடந்து விடுவதில்லை! கடைசி நேரம் எழும் பதட்டத்தில், துப்பாக்கி ஏனோ தானோ என்றுநம் கைகளால் பிடிக்கப்படுவது தான் உண்மை! அந்த நிலையில் துப்பாக்கியின் விசை அழுத்த படும்போது , அதனுள் இருந்து சீறி பாயும் புல்லட், கணப்பொழுதில் நம் உயிரை மாய்க்குமா இல்லை நாம் வாழப் போகும் ஒவ்வொரு பொழுதும் நம் உயிரை வாங்குமா என்பதை கண்டிப்பாக நாம் அறிய வாய்ப்பு இல்லை ! மேலும், தன் குடும்பத்தினர் மீது , தீரா பாசம் கொண்டவர் யாரும் இந்த வழியை தேர்ந்தெடுக்க மாட்டார்கள் ! ஏனெனில் , உங்களின் கடைசி ஞாபகம் , உங்கள் மலர்ந்த முகமாகத்தான் உங்கள் குடும்பத்தினருக்கு இருக்க வேண்டும், மூளை சிதறி மரித்த முகமாக அல்லவே!
வாகனத்தை வேகமாக ஓட்டி சென்று எதிரே வரும் வாகனம் மீது மோத விடுவது
தற்கொலை செய்வதற்கு இது ஒரு வழி! இந்த வழியை தைரியமாக தேர்ந்தெடுத்து அதை செய்து முடிக்க நினைப்பவர்கள் அத்தனை பேரும் கடைசி நிமிடத்தில் தங்களை அறியாமலேயே கோழைத்தனமாக ப்ரேக்கை பிடித்து விடுவது தான் உண்மை ! மேலும் , மோதலினால் உண்டாகப் போகும் தீங்கில் இருந்து தங்களை காப்பாற்ற எண்ணி சுருண்டு படுத்து கொள்வது , முகத்தை கைகளால் மறைத்து கொள்வது போன்றவற்றை மறக்காமல் செய்வதுண்டு ! இதை தான் உள்ளுணர்வு என்று சொல்வர்! ஆசை ஆசையாய் சாக துணிந்த பின்னும் உயிரை கையில் கெட்டியாய் பிடித்து கொள்வதை எல்லாம் என்னவென்று சொல்ல! கடைசி நிமிடத்தில் வாழ விருப்பம் வந்து என்ன பிரயோஜனம், அதற்குள் மோதிய மோதலில் வண்டி தீ பிடித்து உங்களையும் சேர்த்து கரி கட்டையாகி விடும்! அப்படியே வண்டி தீ பிடிக்க வில்லை என்றாலும் , மோதலில் உண்டான காயங்களினால் உண்டாகும் இரத்த கசிவுகளால் , அதீத துன்பத்தில் உயிரை விடுவது நிச்சயம்! இது தேவையா?? அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் , காப்பீட்டு முகவர்கள் இது போன்று வாகன விபத்துகளில் பலியானவர்கள் , விபத்தில் பலியானார்களா இல்லை தற்கொலை செய்து கொண்டார்களா என்பதை அறிய , டயரின் குறி பதிந்த தூரத்தின் அளவை அளந்து பார்த்து , பலியானவர் எந்த இடத்தில் வண்டி ஓட்டி வரும் போது பிரேக்கை பிடித்தார் என்பதை அறிந்து கொள்வர்! அப்புறம் உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணா கதை தான் !
ஆழமான நீர் நிலைகளில் சென்று விழுந்து உயிரை விடுவது
இதுவும் அவ்வளவு சுலபமான தற்கொலை வழி எல்லாம் கிடையாது! ஆழமான நீரில் விழுந்தவுடன் என்ன ஆகும் தெரியுமா?? ஆழமான நீர் நிலையின் உள்ளே, உயிர் விடுவதற்காக ,குதித்த பின்னரும் , நம்மை அறியாமலேயே , நாம் நம் உயிரை காக்க ஒரு போராட்டத்தில் ஈடுபடுவோம்! அவ்வாறு கையை , காலை அசைத்து போராடும் போது , நம் உடம்பில் இருக்கும் தசைகளில், பாலமிலம்(Lactic Acid ) கட்டும்… அவ்வாறு பாலமிலம் தசைகளில் கட்டப்படும் நேரம் , நம் உடம்பில் பிராணவாயு இல்லாமல் போகும் போது , ஏதேனும் சில தசைகளில் அல்லது எல்லா தசைகளிலும் ஒரு இறுக்கம் உண்டாகும்! அது மிகவும் துன்பமான வலியை தரக்கூடியது! இந்த நரக வேதனையில் இருந்து விடுபடுவதற்காகவாவது , உடனடியாக தண்ணீரில் இருந்து வெளியே சென்று காற்றை சுவாசிக்கவே அந்நிமிடத்தில் நம் மனமும் உடம்பும் விரும்பும்! தன் உயிரை ஆழமான நீர் நிலையினுள்ளே குதித்து மாய்த்து கொள்ள விரும்பி , பின் உயிர் பிழைத்தவர்கள் இத்தகைய துன்பத்தை ஒத்து கொண்டதுண்டு! ஆக , இவ்வழியும் நாம் நினைத்தது போல் ஒன்றும் சுலபமானது இல்லை!
அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை உட்கொள்ளுதல்
அதிக அளவில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்ய முடிவு எடுத்தது எல்லாம் சரி தான்… ஆனால் அம்மாத்திரைகள் நிஜமாகவே நம் உயிரை மாய்த்து கொள்ள உதவுமா இல்லை நம் உடம்பில் உள்ள முக்கிய உறுப்புகளுக்கு தீங்கு விளைவித்து நம்மை சொல்லொனா துயரத்தில் ஆழ்த்துமா என்று முதலில் அறிந்து கொள்வது முக்கியம்! அவ்வாறு அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை உட்கொண்டாலும் , அதிக விழிப்போடு இருக்கும் நம் உடம்பு , நம் உயிரை காக்க , வாந்தியை தூண்டி விட்டு , விஷத்தை நம் உடம்பை விட்டு அப்புறப்படுத்தும் வழியில் ஈடுபடும்! யார் கண்டார்கள் சிறிது நேரத்தில் நாம் கண் விழித்து, நான் எங்க இருக்கிறேன் என்று கேட்டாலும் ஆச்சரிய படுவதற்கில்லை!
ஆசிட் , பாத்ரூம் கிளீனர், பூச்சி மருந்து போன்றவற்றை குடிப்பது
மாத்திரை எல்லாம் நமக்கு லாயக்கு படாது என்று அவசரப்பட்டு , கண்ணுல படுற ஆசிட் , பாத்ரூம் கிளீனர் , பூச்சி மருந்தெல்லாம் குடிச்சா உயிர் சுலபமா போகுமான்னு தெரியல.. ஆனா உள்ளே செல்லும் இவ்வகை வேதியல் பொருட்கள் நம் உடம்பின் உள் இருக்கும் உறுப்புகளை தின்றது போக.. முடிவில் நம்மையும் உயிரோடு கதற கதற தின்று விடும் என்பது தான் கசப்பான உண்மை!
தூக்கு மாட்டி கொள்வது
தற்கொலை எண்ணம் வந்தவுடன் ஒரு மின்விசிறியும் , ஒரு சீலையும் இருந்தா போதும் சுலபமா காரியத்தை முடிச்சிடலாம்னு நினைப்பவர்களை என்ன செய்வது! அதிக வலி தெரியாது தூக்கு மாட்டி கொள்ள விரும்புபவர்கள் , தங்கள் எடைக்கு தகுந்தாற் போல் கயிற்றை முதலில் தேர்ந்து எடுக்க தெரிந்து கொள்ளனும்! மேலும் கயிறு எவ்வளவு நீளத்துக்கு தொங்க விட வேண்டும் போன்ற கணக்கு போட தெரிந்திருக்க வேண்டும்! எனக்கு சும்மாவே கணக்கு வராது.. இதிலே மேலே சொன்னதற்கு உண்டான சரியான கணக்கு என்ன என்று தயவு செய்து யாரும் கேட்டுடாதீங்க! எனக்கு தெரியாது! கயிற்றின் நீளம் சின்னதாக இருந்தா கழுத்து நெறிப்பட்டு துடி துடித்து சாவீர்கள்! கயிறு ரொம்ப நீளமாக இருந்தா , நீங்கள் தொங்க முயலும் போது , உங்கள் உடம்பு கயிற்றோடு சேர்ந்து ஆடுகின்ற வேகம் தாங்க மாட்டாது தலை தனியே துண்டிக்க பட்டாலும் பட்டு விடும்! நிறைய கேசுகளில் எசக்கு பிசக்காக தூக்கு மாட்டி கொள்ள முயன்று , தலையின் உள்ளே அழுத்தம் அதிகரித்து , கருவிழி வெடித்து, முழி பிதுங்கி இறந்தவர்கள் பலர்!மேலும் , நிறைய கேசுகளில் , முதுகெலும்பு படாரென்று முறிந்து விடுமாம்! இதென்னையா வம்பா போச்சுனு நினைக்க தோணுது இல்லையா! தூக்கு மாட்டி கொண்டு இறந்தவர்கள் பலர் கடைசி நிமிடத்தில் , கழுத்தில் தூக்கு மாட்டி கொள்ளாமல் இருக்க , கழுத்தை இறுக்கும் கயிற்றை தடுக்க முயன்று , போராடி , கழுத்தில் நகத்தை பதிய வைத்து இறந்தவர்கள் ஏராளம்! இது ஒன்று போதும் இது அப்படி ஒன்றும் சுலபமில்லை என்பதை அறிவதற்கு!மேலும் , கயிற்றினில் விரைந்து ஆடும் உடம்பின் எடையை தாங்கும் அளவுக்கு உதவக்கூடிய எந்த பொருளும் வீடுகளில் இ ருப்பது இல்லை!
உ ச்சியான இடத்தின் மேலிருந்து குதித்தல்
மிக உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் போது , பயத்திலேயே சாவு நம்மை தழுவி விடும் என்று கண்டிப்பாக தப்பு கணக்கு போட வேண்டாம்! இருபது மாடி உயரத்தில் இருந்து தற்கொலை செய்ய நினைத்து ,குதித்து , உயிர் பிழைத்தவர்களும் உண்டு…ஒற்றை மாடியின் மேலிருந்து குதித்து உயிரை விட்டவரும் உண்டு! அது எப்படி 20 மாடியிலிருந்து குதித்து உயிர் பிழைத்தார் என்று ஆச்சரியப்படுபவர்களே, நாம தான் ஏற்கனவே மேலே பார்த்தோமே , அவ்வாறு அதிக உயரத்தில் இருந்து குதிக்கும் போது , நம் உடம்பு எப்பவும் விழிப்பாக இருக்கும் காரணத்தினால் , தன்னை தானே முடிந்த வரை பாதுகாத்து கொள்ள வேண்டி அந்தரத்தில் விழும் போதே நன்கு சுருண்டு கொள்ளும்! அதனால் தரையில் விழும் போது , கை , கால் உடைந்து போகலாம் , ஆனால் உயிர் போகாது!
கை நரம்பை வெட்டி கொள்ளுதல்

Cartoon image of a male person with blonde hair, wearing light blue collared long sleeved shirt, black pants and shoes, sits on the surface, as he tries to slash his left wrist with a stainless kitchen knife, right hand holding the brown wooden handle, blue eyes have a look of sadness and depression, mouth frowning in sadness
இந்த முறையை சினிமாவில் அடிக்கடி கண்டிருக்கிறோம் அல்லவா! மிக எளிதாக மணிக்கட்டில் ஒரு வெட்டு , இரத்தம் நிற்காமல் ஒழுகி கொண்டே இருக்கும் , முழுதாய் வெளியேறி முடிந்தவுடன் உயிரும் போய் விட்டு இருக்கும்! இப்படி எல்லாம் காண்பித்து , நம் காதில் பூ சுற்றவே முயலுகிறார்கள் சினிமா காரர்கள்! அதை எல்லாம் தயவு செய்து நம்பாதீர்கள்! கையிலே எத்தனை இரத்த குழாய் செல்கிறது , இதுல எதை வெட்டுனாலும் சாவு நிச்சயம் கிடையாது! நாம் வெட்ட வேண்டிய முக்கியமான இரத்தகுழாய் தசைநாண்களுக்கு இடையே தெரியாமல் ஒளிந்து கொண்டு இருக்கும்! அதை வெட்டுவதற்கு , சினிமாவில் காட்டுவது போல் ஒத்த வெட்டேல்லாம் பத்தாது! நிறைய தடவை வெட்டுனா தான் நீங்க நினைத்தது கொஞ்சமாவது ஈடேறும்! அப்படியே நீங்கள் தைரியமாக கை நரம்பை வெட்டி கொண்டாலும் , இரத்தம் வெளியேறி மயக்கம் வருவது என்னவோ உண்மை தான்.. ஆனால் , சிறிது நேரத்தில் இரத்த காயம் அடைந்து(Blood Clot ) உங்களை நீண்ட நெடும் தூக்கத்துக்கு செல்ல விடாமல் தடுத்து எழுப்பி விட்டு விடும்!
தண்டவாளத்தில் தலையை வைத்தல்
தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்ய விரும்புபவர் , பயமின்றி தண்ட வாளத்தில் தலையை வைப்பது என்னவோ உண்மை தான்! ஆனால் ரயிலின் ஓசை நெருங்க நெருங்க , உள்ளம் பதைபதைத்து , பயந்து , நடுங்கி , ஒரு மிக துன்பமான சாவை எதிர்கொள்வர்!
இவ்வளவு தூரம் தற்கொலைக்கான வழிகளை விவரித்த பிறகும் ஒருவர் தற்கொலை முடிவை எடுப்பார் ஆனால் அவர் மிகுந்த தைரியசாலியாக தான் இருக்க வேண்டும்! ஆனால் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் தற்கொலை செய்து மடிந்தவர்களை இவ்வுலகம் கோழைகளாகவே தங்கள் மனதில் நினைவில் வைத்திருப்பார்! வாழ்க்கையில் துன்பம் வரும் போகும்.. உயிர் போனால் போனது தான்! வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதில் இருந்து மீளுவதற்கான வழியை தான் தேட வேண்டும்! அற்பமாக தற்கொலை செய்வதற்கான வழிகளை இல்லை! இன்றைய கால கட்டத்தில் பள்ளி மாணவ மாணவியர் கூட இத்தகைய துயரமான முடிவுகளை எடுப்பதற்கு காரணம் அவர்களது அறியாமையே! அவசரப்பட்டு தற்கொலை என்னும் வழியை தேர்ந்தெடுப்பது பெரியதல்ல.. பாதி வழியில் மனம் மாறினால் கூட திரும்ப வந்த வழியே வருவது என்பது இயலா காரியம்!! வாழ்க்கையில் எந்த ஒரு முடிவு எடுக்கும் போதும் ஆற அமர யோசித்து முடிவெடுப்பதே உத்தமம்! நன்றி!
தற்கொலைக்கான வழிகளை விவரித்த பிறகும்… ம்ஹீம்… யாருக்கும் அந்த எண்ணமே வராது…!
ஆமாம், தேங்காய் சட்னி செய்வது ரொம்ப சுலபமா…? ஹிஹி…
LikeLike
ஆம் தனபாலன் சார்! எந்த விஷயத்தில் இறங்குவதற்கு முன்பாகவும் , அதை பற்றி அலசி ஆராய்ந்து தெரிந்து கொள்ளுவது நல்லது! இல்லையேல் , கஷ்டம் தான்! ஆமாம் சார் , எனக்கு சட்டுன்னு முடியுற வேலைகளில் ஒன்று தேங்காய் சட்னி செய்வது 😀
LikeLike
எனது வட்டத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்… நன்றி…
LikeLike
உங்கள் வட்டத்தில் பகிர்ந்து கொண்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் சார் 🙂
LikeLike
அய்யய்யோ இதுக்கு நான் நேற்றுப் பார்த்த முனி 3 [படமே தேவலாம் போல இருக்கே! என்னா ஒரு டெரர்! எனக்கு கண்ணுக்குள்ள என்னோவோ எல்லாம் வந்து போறமாதிரி இருக்கு… கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாறன்…
LikeLike
நிஜமாகவே அது டெரர் படம் தான் சரவணா! உன் முகப்புத்தகத்தில் இதை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙂
LikeLiked by 1 person
🙂 nalla pathivukal veli varavendum!
LikeLike
Reblogged this on அறிவியல் தமிழன் – Ariviyal tamilan.
LikeLike
இதை மீள் பதிவு செய்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் அவினாஷ்!
LikeLike
தற்கொலையை விட தற்கொலை முயற்சிகளும் அதன் பின்விளைவுகளும் இன்னும் அச்சம் தருகின்றனவே!
நானும் என் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன், மஹா!
LikeLike
ஆம் அம்மா! மிகுந்த அச்சமூட்டும் விஷயம் தான்! இது போன்ற விஷயங்களை பாட திட்டத்தில் கொண்டு வந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.. இரண்டு நாள் முன்பு கூட ஒரு மும்பை மாணவி , பஸ் பாஸ் எடுத்து தரவில்லை என்று மனமொடிந்து போய் தற்கொலை செய்து கொண்டாள்! அறியாமை தான் இது போன்ற வருத்தங்களுக்கு காரணம்!
LikeLiked by 1 person
இருதினங்களுக்கு முன்பு இந்தியாவில் எனது நண்பரின் மகன் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் அறிந்தேன் அந்த சம்பவம் எனது மனத்தை அழக்கழிக்கிறது ஒருவேளை அவன் இந்த கட்டுரையை படித்து இருக்க வாய்ப்பு கிடைத்து இருந்தால் அவன் அந்த முயற்சியில் இருந்து தப்பித்து இருப்பானோ என்று தோன்றுகிறது
LikeLike
உங்கள் நண்பரின் மகன் எடுத்த முடிவு மிகுந்த வருத்தமளிக்கிறது! பள்ளி பாடங்களில் இது போன்ற முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இடம் பெற வேண்டும்! மன அழுத்தத்தில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை தகுந்த நேரத்தில் கொடுக்கும் போது , அவர்களுக்கு தற்கொலை போன்ற வேதனை அளிக்கும் எண்ணம் வராமல் தடுக்கலாம்!
LikeLike
இத்தீபாவளி நன்நாள் – தங்களுக்கு
நன்மை தரும் பொன்நாளாக அமைய
வாழ்த்துகள்!
யாழ்பாவாணன்
http://www.ypvnpubs.com/
LikeLike
ஐயயோ!இப்படி ஒரு பதிவ நான் வாழ்கையில படித்ததே இல்ல.என்ன துணிச்சலா எழுதியிருக்கிங்க.ராகவா லாரன்ஸ் மட்டும் இந்தப் பதிவப் பார்க்கோணும்.அடுத்த காஞ்சனா கதை தயார்.இனியும் எவனாவது தற்கொலை செய்வான் என்று நினைக்கிறீங்க.படத்தில கூட எவனும் நினைக்க மாட்டன்.
தண்டவாளத்தில் தலையை வைத்தல்– இதுக்கு கீழ ஒரு படம் போட்டிருக்கிங்க.பயத்தில ஒரு சிரிப்பு வரும் என்று தெரியுமா.அது போல ஒரு சிரிப்பு. ##### உண்மையாச் சொல்றன் கலக்கிட்டிங்க.செம…செம……..வாவ்…………
LikeLiked by 1 person
நன்றி பிரபுவின்! தற்கொலை எண்ணம் யாருக்கும் எந்த நிலையிலும்வரக்கூடாது! மக்கள் மனதில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்ததன் விழைவு தான் இப்பதிவு 🙂
LikeLiked by 1 person
Reblogged this on பிரபுவின் and commented:
தற்கொலை செய்யப் போறீங்களா.அப்ப இந்தப் பதிவப் பாருங்க. சந்தோசமா வாழுங்க.
நன்றி மகா அக்கா.
LikeLiked by 1 person
😀
LikeLiked by 1 person