ஆஸ்துமாவை புரிந்து கொள்ளலாம் வாங்க

asthma1

ஆஸ்துமா என்ற பெயரை பெரும்பாலும் அனைவரும் அறிவர்! ஆனால், ஆஸ்துமா நோயை அனுபவித்து அறிந்தவரால் மட்டுமே, அந்த நோயின் தீவிரத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்! இந்த ஆஸ்துமா நோய் , உனக்கு தான் வரும் , எனக்கு தான் வரும் என்றெல்லாம் கிடையாது.. யாருக்கு வேண்டுமானாலும் , எந்த வயதிலும் , எந்த கால நிலையிலும் வரக்கூடும்!இதை முழுமையாக குணப்படுத்துவதற்கு என்று மருந்து ஒன்றும் கிடையாது! ஆனால், இந்த நோயை , சில மருந்துகள் மூலம் , நம் கட்டுக்குள் வைத்து கொள்ளலாம். அவை , எவை எவை என்று தெரிந்து கொள்ளும் முன்னே , ஆஸ்துமா என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்!

ஆஸ்துமாவை தெரிந்து கொள்ளும் முன்னே , சுவாசப்பாதையை ஒரு தடவை சுற்றி பார்த்து வந்து விடுவோம்.  நாம் நம் மூக்கின் வழியாக சுவாசிக்கிறோம்… அவ்வாறு சுவாசிக்கப்படும் காற்று, நம் மூக்கின் உள்நுழைந்து , சுவாசப்பாதை வழியாக , நுரையீரலை அடைந்து , பின் வெளியேறுகிறது!

asthma3

ஆஸ்துமாவால் வருந்துபவர்களுக்கு , இந்த சுவாசப்பாதை வீக்கமடைந்து இருக்கும். அதனால் , அவை வழிநெடுகிலும் , உப்பிய நிலையில் , மிகவும் உணர்ச்சிமிக்கதாக இருக்கும் .அதாவது , சில வகை பொருட்கள்,  சுவாசிக்கும் காற்றோடு சேர்ந்து , சுவாசப்பாதையின் உள்நுழையும் போது , இந்த உணர்ச்சி மிகுந்த சுவாசப்பாதை ,  சிறிது அதிகப்பிரசங்கித்தனமாகத்தான் நடந்து கொள்ளும்!

asthma2

சுவாசப்பாதை எவ்வாறு அதிகப்பிரசங்கித்தனமாய் நடந்து கொள்ளும் என்றால் , சுவாசப்பாதையின் நெடுகிலும் உள்ள தசைகள் இறுகிவிடும். அவ்வாறு , தசைகள் ஆனது , தளர்வாக இல்லாமல் , இறுகி விடுவதால் , சுவாசப்பாதை குறுகிவிடும். அதனால் , நுரையீரலுக்கு எடுத்துச் செல்லப்படும் பிராணவாயுவின் அளவு குறைந்து போகும். மேலும் , ஆஸ்துமாவால் அவதியுறுபவர்களுக்கு , சுவாசப்பாதை வீக்கம் கொண்டிருப்பதால் , சுவாசப்பாதை மேலும் குறுகிப்போகும் .இது பத்தாது என்று , சுவாசப்பாதையில், இருக்கும் உயிரணுக்கள் , தேவைக்கும்  அதிகமாக , சளியை சுவாசப்பாதையில் சுரந்து , பாதையை  முடக்கி  விடும்! இவ்வாறு நடக்கும் தொடர் நிகழ்வுகளின் விளைவாய் சுவாச காசம்(ஆஸ்துமா ) தோன்றி விடுகிறது!

என்ன மாதிரி காரணங்களால் ஒரு சிலருக்கு இந்த ஆஸ்துமா உருவாகிறது என்று அடுத்து பார்க்கலாம்!
1) உணவினால் உண்டாகும் ஒவ்வாமை! அதாவது, முட்டை , மீன் , பால் , கோதுமை ,சோயா , பழங்கள் ,  நிலக்கடலைபோன்றவை உண்ணப்படும் போது சிலருக்கு ஒவ்வாமை உண்டாகும்! அவை, அவர்களுக்கு ஆஸ்துமாவை உண்டு பண்ணி விடும்!மேலும் , உணவை பதப்படுத்துவதற்க்காக சேர்க்கப்படும் வேதியல் பொருட்களும் மற்றும் உணவில் சேர்க்கப்படும் செயற்கை நிறங்கள் ஆகியவையும் ஆஸ்துமாவை உண்டு பண்ணக் கூடியவை!

asthma5

2)சிகரெட் புகையை சுவாசிப்பதனால் ஆஸ்துமா உண்டாகலாம்!

asthma6

3) தூசி பூச்சிகளால்  ஒருவற்கு ஆஸ்துமா உண்டாகலாம்.. இந்த தூசி பூச்சிகள் எல்லோருடைய வீட்டிலேயும் இருக்க கூடிய ஒன்று தான்! இந்த தூசி பூச்சிகள் நம்மை அண்டாமல் இருக்க, வீட்டில் உள்ள தலையணை உரைகள் , மெத்தை விரிப்புகள், திரை சீலைகள்  ஆகியவற்றை மிக சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம்! அடிக்கடி அவற்றை மாற்றி கொண்டே இருப்பது நலம் பயக்கும்!

asthma4

4)வாகனங்கள் வெளியேற்றும் புகை , தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறி காற்றில் கலக்கும் புகை , பஞ்சு தூசி , கட்டடத்தை இடிப்பதனால் காற்றில் கலந்து விடும் தூசி என்று சகலமும் ஆஸ்துமாவை கிளப்பி விடும் முக்கிய காரணிகள் தாம்!

asthma7

5) கரப்பான் பூச்சியின் கழிச்சல்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்! இந்த ஒவ்வாமையினால் அவர்களுக்கு ஆஸ்துமா உண்டாகலாம் !

cockro

6) உரோமம் அதிகம் உள்ள செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு ஆஸ்துமா உண்டாகலாம்!

Pet-Allergies

7) குளிர் கபசுரத்தால்(Flu) அவதி படுபவர்களுக்கு , ஆஸ்துமா உண்டாகலாம்!

7-Things-You-Need-to-Know-about-Asthma-and-Flu-722x406

8) சைனஸ் நோய் தொற்றினால் அவதிபடுபவர்களுக்கு  , வேதியியல் பொருட்களை வேலை நிமித்தமாய் சதா நுகருபவர்களுக்கு, அமில எதுக்குதலின் பிரச்சனை உள்ளவர்களுக்கு  ஆஸ்துமா வரக் கூடும்!

GERD

9) அதிகப்படியான உடல் பயிற்சி செய்யும் போதும் , சில வகையான மருந்துகளை உட்கொள்ளும் போதும் , ஈரத்தன்மை அதிகம் உள்ள காற்றை சுவாசிக்கும் போதும் , சில நறுமணங்களை நுகரும் போதும் , ஒரு சிலருக்கு ஆஸ்துமா உண்டாகலாம்!

cough

10)அதிகப்படியாக உணர்ச்சி வசப்பட்ட நேரங்களில் உண்டாகக்கூடிய அதிவளியோட்டத்தால்(Hyper Ventilation) ஒரு சிலருக்கு ஆஸ்துமா உண்டாகலாம்!

maxresdefault

இந்த ஆஸ்துமா என்னும் சுவாச காச நோயை முழுமையாக குணப்படுத்துவதற்கு என்று  மருந்து எதுவும் இல்லை! ஆனால் , சில மருந்துகளை , மருத்துவரின் அறிவுரையோடு  முறையாக எடுத்து கொள்ளும் போது , ஆஸ்துமாவை நம் கட்டுக்குள் வைத்து கொள்ளலாம்! அவை எவை எவை என்று அடுத்து பார்க்கலாம்!

ஆஸ்துமா நோயாளிகளுக்கு மருந்தை உட்கொள்ள உதவும் கருவியின் பெயர் இன்ஹேலர்(Inhaler)! இது ஒரு கையடக்க கருவி.  இந்த கருவியின் மூலம் ,  மருந்தை உட்கொள்ளும் போது ,மிக சுலபமாக  , மருந்து  நோயாளியின் நுரையீரலுக்கு நேரடியாக  சென்று அடையும்..  அது ஆஸ்துமாவால் அவதி படுபவர்களுக்கு , உடனடி ஆறுதல் அளிக்கும்! மாத்திரைகள் , ஊசி மூலம் மருந்து எடுத்து கொள்வதை விட , மருந்தை இன்ஹேலர் மூலம் எடுத்து கொள்ளும் போது உடனடி பலன் கிடைக்கும்!

சரி ஆஸ்துமாவை நம் கட்டுக்குள் வைத்துக் கொள்ள அப்படி என்ன தான் மருந்து இருக்கிறது! அது என்ன மாய மந்திர மருந்து என்று தெரிந்து கொள்ளும் ஆவல் கண்டிப்பாக எல்லோருக்கும் இருக்கணும்..
அவை ,
1) உள்ளிழுக்கப்படும் ஸ்டீராய்டுகள்(Inhaled Steroid )
2) மூச்சு குழாயை தளர்த்தி விடும் மருந்து(Bronchodilator )

1)உள்ளிழுக்கப்படும் ஸ்டீராய்டு(Inhaled Steroid)
இது ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்து கொள்ள உதவும் மிக முக்கியமான மருந்து. ஆஸ்துமா பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கு , சுவாசப்பாதை அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொள்ளும் என்று ஏற்கனவே பார்த்தோம்.. அதாவது , சுவாசப்பாதை வழி நெடுகிலும் வீங்கி போகுதல் , சுவாசப் பாதையில் எரிச்சல் உண்டாகுதல், கட்டுக்கடங்காத சளி சுரப்பு  போன்றவை… அதாவது சுவாசப்பாதை அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொள்ளாமல் பார்த்து கொள்ளும் இந்த மருந்து.. இதை அழற்சி எதிர்ப்பு மருந்து(Anti Inflammatory medicine ) என்று சொல்லலாம்! குழந்தைகள் , பெரியவர்கள் எல்லோருக்கும் மிக பாதுகாப்பானது இந்த மருந்து. இந்த மருந்தினால், ஒவ்வாமையினால் தூண்டப்படும் ஆஸ்துமா தடுக்க படும் . ஸ்டீராய்டு என்ற பெயரை கேட்டவுடன் , விளையாட்டு வீரர்கள் எடுத்து கொள்ளும் ஊக்க மருந்தோ என்ற சந்தேகம் எல்லாம் வேண்டாம்! அதற்கும் இதற்கும் துளி கூட சம்பந்தம் கிடையாது !

2)மூச்சு குழாயை தளர்த்தி விடும் மருந்து(Bronchodilator)
ஆஸ்துமாவினால் அவதி படுபவர்களுக்கு, சுவாசப்பாதை குறுகி போகும் , வழி நெடுகிலும் தசைகள் இறுகி போகும் என்று பார்த்தோம் அல்லவா! இந்த மருந்து , நம் சுவாசப்பாதையை , காற்று சுலபமாக உள்ளே சென்று வெளியே வருவதற்கு ஏற்றாற் போல் நன்கு திறந்து விடும்!

இந்த Bronchodilators இரண்டு வகைப்படும்..
1)குறுகிய காலம் செயல் புரியும் மூச்சு குழாய் தளர்த்தி(Short acting Bronchodilator)
2)நீண்ட காலம் செயல் புரியும் மூச்சு குழாய் தளர்த்தி (Long Acting Bronchodilator)

1)குறுகிய காலம் செயல் புரியும் மூச்சு குழாய் தளர்த்தி(Short acting Bronchodilator)
இதனை மீட்பு மருந்து(Rescue Medication ) என்று சொல்வர்.. எதிர்பாராமல் மிக கடுமையான ஆஸ்துமாவால் அவதி படுபவர்களுக்கு , உடனடி ஆறுதல் அளிக்கும் மருந்து இது! இந்த வகை மருந்து 2இல் இருந்து 4 மணி நேரம் வரை வேலை புரியும் . பொதுவாக , அதிக உடல் பயிற்சி மேற்கொண்ட பின்னே வரும் ஆஸ்துமாவால்(Excercise Induced Asthma ) அவதி படுபவர்கள் இந்த மருந்தை உடல் பயிற்சி செய்வதற்கு முன் எடுத்து கொள்வதுண்டு!

in2

2)நீண்ட காலம் செயல் புரியும் மூச்சு குழாய் தளர்த்தி (Long Acting Bronchodilator)
இந்த மருந்தை நீண்ட காலத்துக்கு , ஒரு நாளைக்கு இரு தடவை என்ற கணக்கில் எடுத்து கொள்ளும் போது , ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்து கொள்ள முடியும்! இது குறுகிய காலம் செயல் புரியும் மூச்சு குழாய் தளர்த்தி(Short acting Bronchodilator ) போலே உடனடி ஆறுதல் தருவதற்காக குடுக்க படுவது அல்ல.. இதை நீண்ட நாள் எடுத்து கொள்ள வேண்டும்.. இந்த மருந்து ஆஸ்துமாவை தன் கட்டுக்குள் வைத்து கொள்ளும். இந்த மருந்தை , மருத்துவரின் பரிந்துரைப்படி , முறையாக நீண்ட காலம்எடுத்து கொள்ளும் போது , பெரியதாக எந்த பிரச்சனையும் சந்திக்க வேண்டி வராது ! இதை கட்டுப்படுத்தும் மருந்து (Control Medication ) என்று சொல்வார்கள் . பெரும்பாலும், நீண்ட காலம் செயல் புரியும் மூச்சு குழாய் தளர்த்தியை (Long Acting Bronchodilator), உள்ளிழுக்கப்படும் ஸ்டீராய்டு(Inhaled Steroids) மருந்துகளோடு சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும்.

in1

இனி இந்த மருந்துகளை  எந்தெந்த வகைகளில் நம் நுரையீரலுக்கு கொடுக்கலாம் என்று பார்த்து விடலாம்.மருந்தை நேரடியாக நுரையீரலுக்கு அளிக்க மூன்று வகையான  வழிமுறைகள்  இருக்கின்றன..
அவை ,
1) Metered Dose Inhaler
அதாவது ஒரு தரம் கொடுக்க வேண்டிய மருந்தின் அளவை அளந்து பார்த்து கொடுக்க கூடிய இன்ஹேலர். இது பார்ப்பதற்கு ஒரு ஸ்பிரே கேனை(Spray  Can ) போல் இருக்கும். இதன் உள்ளே மருந்து  அதிக அழுத்தத்தில் அடைத்து வைக்கப் பட்டிருக்கும்.

asthma6

படத்தில் காட்டியவாறு , இந்த இன்ஹேலர்  அமுக்க படும் போது , மருந்து நம் மூச்சு காற்றோடு சேர்ந்து நுரையீரலை சென்றடையும்.

asthma5

இந்த இன்ஹேலர்  மூலம்,மூச்சு விட சிரமப்படும் குழந்தைகளுக்கு சுலபமாக மருந்தை கொடுக்க நினைப்பவர்களுக்கு ,கை கொடுக்க வென்றே உருவாக்கப்பட்டது தான் Spacer. இது குழாய் போன்று காட்சியளிக்கும் ஒரு உபகரணம்! இந்த Spacer குழந்தைகளுக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது! இது இன்ஹேலரில் இருந்து  வெளி  வரும் மருந்தை சில நிமிடங்கள் தக்க வைத்து கொள்ளும்! சிறு குழந்தைகளால் மருந்தை டோஸ் குறையாமல் எடுத்து கொள்ள இந்த Spacer மிகவும் உதவியாக இருக்கும்.

asthma3

இந்த உபகரணத்தோடு ஒரு முகமூடியும்(Mask) சேர்ந்தே உபயோகிக்க படும்!

asthma4

asthma2

https://www.youtube.com/watch?v=hCAsW7OM9N

2)Dry powder Inhaler
இந்த வகை இன்ஹேலர்களில், மருந்தானது பவுடர் வடிவில் , உட்கொள்ள படுகிறது! பவுடர்களை ஒரு கேப்ஸ்யூலில் அடைத்து வைத்திருப்பார்! இந்த இன்ஹேலர்களை உபயோகிக்கும் போது ,மருந்தோடு சேர்த்து , அழமாக  மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.. இல்லையேல் , மருந்து முழுமையாக உள்ளே செல்லாமல் , இன்ஹேலரின் உள்ளேயே தங்கி விடும். ஆதலால் ,கடுமையான  ஆஸ்துமா தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு  , இந்த இன்ஹேலர்களை உபயோகம் செய்வது அவ்வளவு சுலபமாக இருக்காது !

asthma8          asthma9

asthma7

3) Nebuliser
இது மின்சாரத்தால் இயங்கும் ஒரு சாதனம்! இந்த சாதனம் , திரவ நிலையில் இருக்கும் மருந்தை , மூடு பனி போல் மாற்றி  கொடுக்க , ஒரு முகமூடியின் உதவியுடன்  மருந்து , நம் நுரையீரலை சென்று அடைகிறது! இந்த சாதனத்தின் மூலம் மருந்தை முழுமையாக எடுத்து கொள்ள 5 முதல் 10 நிமிடம் வரை ஆகும்! மேலே குறிப்பிடப்பட்ட இன்ஹேலர்களை சரி வர உபயோகிக்க தெரியாதவர்கள் , குழந்தைகள் ஆகியோருக்கு இந்த nebuliser  ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம் !

asthma10

இந்த ஆஸ்துமா நோயை முழுமையாக குணப்படுத்த என்று மருந்து ஒன்றும் கிடையாது.. மேலே கூறிய வழிகளின் மூலம் நமது கட்டுக்குள் வைத்து கொள்ளலாம். மேலும் ஒவ்வாமை பிரச்சனையால் ஆஸ்துமா தூண்டப்பட்டு அவதிப்படுபவர்கள் , மருத்துவர் பரிந்துரைப்படி ,காலத்துக்கு ஏற்றாற் போல்  ஒவ்வாமை ஊசிகள்(Allergy shots ) எடுத்து கொள்வது ஆஸ்துமா பிரச்சனை வருமுன் காக்க உதவும்!நன்றி !

This entry was posted in வகைப்படுத்தப்படாதது and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to ஆஸ்துமாவை புரிந்து கொள்ளலாம் வாங்க

 1. பிரபுவின் சொல்கிறார்:

  நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்திருக்கிறீர்கள்.நேர முகாமைத்துவம் எவ்வளவு சிரமமானது என்பதை நானும் அறிவேன்.உங்களது ஒவ்வொரு பதிவும்/ஆக்கமும் ஒவ்வொரு முக்கிய விடயத்தை எனக்கு உணர்த்தியே செல்கின்றது.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வார்கள்.அது உண்மைதான்.ஆனால்,அந்த நோய்களப் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் அவற்றில் இருந்து தப்பி விடலாம் என்பதற்கு உங்கள் இந்தப் பதிவு சான்று.நீங்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய மாட்டீர்கள்.மிகவும் ஆராய்ச்சி செய்தே பதிவுகளை பிரசுரம் செய்வீர்கள்.எனது நண்பர்கள் இருவருக்கு இந்தப் பிரச்சனை மிகவும் அதிகமாகவே இருக்கின்றது.பார்த்தால் பாவமாக இருக்கும்.அவர்களுக்கு இந்தப் பதிவை படிக்கக் கொடுக்கப் போகின்றேன்.இந்த நோயை குணப் படுத்த முடியாது என்று அறியும் போது அதிர்ச்சியாகவும் இருக்கின்றது.
  சுவாசப் பாதை வீக்கமடைந்து சுருங்கும் போது அவர்கள் எவ்வளவு கொடுமையை அனுபவிப்பார்கள் என்பதை நினைக்க வேதனையாக இருக்கின்றது.
  நன்றி மகா அக்கா.
  வாழ்க வளமுடன்.

  Like

  • mahalakshmivijayan சொல்கிறார்:

   வா பிரபு! உன் பின்னூட்டத்தை நான் அன்றே வாசித்து விட்டேன்! பிள்ளைகள் எல்லாம் விடுமுறையில் இருந்ததால், பதில் அளிக்க நேரம் காலம் ஒத்து வர வில்லை ! உங்கள் நண்பர்களுக்கு இந்த பதிவு உதவினால் மிக்க மகிழ்ச்சியே! என் பிள்ளைகளுக்கு இப்பிரச்சனை உண்டு! அதனால் தான் இதை பதிவு செய்தேன்.. உன் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி பிரபு 🙂

   Liked by 1 person

 2. Sri Saravana சொல்கிறார்:

  வாவ் அருமை அக்கா! நேரம் தாழ்த்தி பின்னூட்டம் இடுவதற்கு மன்னிக்கவும்! சூப்பர் பதிவு. எனக்கும் சிறுவயதில் ஆஸ்துமா பிரச்சினை இருந்து வளர்ந்ததும் நின்றுவிட்டது. மிகத் தெளிவாக விளக்கி இருக்குறீர்கள்! சைக்கில் காப்பில் இதனை எழுதியிருக்க முடியாது! ஒத்துக்கொள்கிறேன் ஹிஹி.

  தயவுசெய்து இதனை எனது பக்கத்தில் ஷேர் செய்கிறேன் அக்கா.

  Like

 3. சங்கர் சொல்கிறார்:

  நன்றி

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s