இவ்வுலகில் யாருமே தங்கள் காதால் கேட்க விரும்பாத ஒன்று , ‘உங்க வாய் நாறுது ‘ என்பதை! அதை விட அவமானம் வேறொன்றுமில்லை. இதனால் கணவன் மனைவி உறவில் விரிசல் கூட ஏற்படுவதுண்டு இந்த வாய் துர்நாற்றம் எதனால் உண்டாகிறது,இந்த பிரச்சனைக்கு ஏதேனும் தீர்வு உண்டா , என்பதை இப்பதிவில் தெளிவாக அறிந்து கொள்வோம்.
வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் பாக்டீரியாக்கள்(Bacteria ) .
எல்லோருக்கும் வாய் துர்நாற்ற பிரச்சனை உண்டு! பெரும்பாலும் காலை நேரங்களில் , தூக்கத்தில் இருந்து விழித்துவுடன், வாயிலிருந்து ஒரு நாற்றம் கிளம்பும். யாராலும் , தங்களுக்கு இருக்கும் வாய் துர்நாற்றத்தை , பிறர் குறை சொல்லாத வரையில் அறிய முடியாது! உங்கள் வாய் நாற்றம் பற்றி உங்கள் நம்பிக்கைக்குரிய நண்பரிடம் சென்று விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்!
80% வாய் துர்நாற்றம், வாய் மூலமாக தான் வருகிறது! அதாவது , பல் துவாரங்கள்(Cavities ), ஈறுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் , அடிநாச்சதையில்(Tonsils ) உணவு துகள்கள் சிக்கி இருத்தல் , ஒழுங்காக சுத்தம் செய்யப்படாத பொய் பற்கள் போன்றவற்றால் வாயில் இருந்து துர்நாற்றம் கிளம்புகிறது! நம் நாக்கு , பாக்டீரியாகளுக்கு சிகப்பு கம்பளம் விரித்தாற் போல் இருக்கும்!
நம் உடம்பின் உள்ளே இருக்கும் பிரச்சனைகளினாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது , நீரிழிவு நோய் (Diabetes ), கல்லீரல்(Liver ) நோய் , சுவாச பாதை நோய் தொற்று(Respiratory Tract Infections ),கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி(Chronic Bronchitis ) ஆகியவற்றாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும் . மருத்துவரிடம் சென்று நாசி சொட்டு நீர் பிரச்சனை (Post Nasal Drip ), அதாவது மூக்கில் உள்ள அதிகப்படியான சளி தொண்டையில் இறங்குகிறதா என்பதை அறிந்து கொள்ளுவது நல்லது. மேலும், இரைப்பையில் உள்ள அமிலம் பின்னோக்கி வழியும் பிரச்சனை(Acid Reflux ) எதுவும் உள்ளதா என்பதையும் மருத்துவரிடம் சென்று அறிந்து கொள்வது , வாய் துர்நாற்ற பிரச்னையை ஒழிக்க பெரிதும் உதவும். சிலருக்கு ஒரு குறையும் இல்லாத பற்களும் , சுத்தமான நாக்கு இருந்தும் , வாய் துர்நாற்றம் இருக்கும்! இத்தகையவர்களுக்கு கண்டிப்பாக, இரைப்பை அமிலம் பின்னோக்கி வழியும் பிரச்சனையே மூலக் காரணமாய் இருக்கும்!
இப்பொழுது, இந்த வாய் துர்நாற்ற பிரச்னையை எப்படி சரி செய்யலாம் என்று பார்க்கலாம்.
1) நம் வாயை சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு தடவை சாப்பிட்டு முடித்த பின்னும் , நன்கு பல்லை தேய்த்து , சுத்தமான தண்ணீரால் வாயை கொப்பளித்து விடுவது நல்லது. பல்லை தேய்க்கும் போது பிரஷ் கொண்டு ஒரு குறிப்பிட்ட நேரமாவது பல்லை நன்கு தேய்க்க வேண்டும். அவசரம் கூடாது. பாக்டீரியாவை எதிர்க்கும் வாய்கழுவியை (Anti Bacterial Mouthwash ) உபயோகிப்பது நலம் பயக்கும்!
2) நாம் என்னென்ன உணவுகளை உட்கொள்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். நம் வாய் வழியாக வரும் காற்றின் நாற்றம் , நாம் என்ன உணவு எடுத்து கொண்டோம் என்பதை பொறுத்தே அமையும்! நாம் சாப்பிட்ட உணவு , இரைப்பையில் செரிமானம் ஆகி , பின் அதன் சத்து இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு ,அதன் நாற்றம் , பின் நுரையீரலால் நாம் சுவாசிக்கும் காற்றின் மூலமாக வெளியே தள்ளப்படுகின்றது!
தீவிர உண்ணாவிரதமும், கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளும் எடுத்து கொள்ளும் பொழுது பிரச்சனைகள் உருவாகின்றன .
கார்போஹைட்ரேட் குறைவான உணவுகள் எடுத்து கொள்ளும் பொழுது, நம் உடம்பு சக்தியை (Energy ) பெருவதற்காக, நம் உடம்பில் உள்ள கொழுப்பை உடைக்கிறது! அவ்வாறு கொழுப்பை உடைத்து சக்தியை பெரும் பொழுது , நம் உடம்பு கீடோன்ஸ் (Ketones ) என்ற இரசாயனத்தை உடம்பில் உருவாக்குகிறது . அதில் கொஞ்சம் நம் வாயின் வழியே வெளியிடப்படுகிறது! அந்த இரசாயனம் துர்நாற்றம் கொண்டது! ஆதலால் நம் வாயிலும் துர்நாற்றம் வீச ஆரம்பித்துவிடும்!
இதை தடுக்க கார்போஹைட்ரேட் நிறைந்த வாழைப்பழங்களை சாப்பிடுவது , இந்த பிரச்சனையை சரி செய்ய உதவும்.வைட்டமின் C நிறைந்த பழங்களை உணவில் சேர்த்து கொள்ளும் போது , அவை வாய் துர்நாற்றத்தின் காரணகர்த்தாவான பாக்டீரியாவை அழித்து விடுகின்றன.
கேரட் , ஆப்பிள் போன்ற உணவுகளை சாப்பிடும் பொழுது , அவை பல் இடுக்கில் மாட்டி கொண்டிருக்கும் உணவு துகள்களை நீக்க உதவும்.
வாய் துர்நாற்ற பிரச்சனையால் அவதிப்படுவோர், வெங்காயம் , பூண்டு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்காமல், தவிர்த்தல் நலம்!
ஆதலால், வாய் துர்நாற்றத்தை தவிர்க்க விரும்புவோர்,
1)நிறைய தண்ணீர் குடியுங்கள்
2)காபியை தவிர்த்து விட்டு , பால் சேர்க்காத தேநீர் அருந்த பழகி கொள்ளுங்கள்
3)புகை பிடிப்பதை நிறுத்துங்கள். புகையிலையை தவிருங்கள்
4)மது குடிப்பதை நிறுத்துங்கள்
5)நல்ல, வாயில் போட்டு மெல்லும் கோந்தை(Chewing gum) சாப்பிட்ட பின்னே உபயோகியுங்கள்.
வாய் துர்நாற்றத்தை தூர விரட்டுங்கள்! ஆரோக்கியமான வாழ்க்கை வாழுங்கள் !
அருமை அருமை!
LikeLiked by 1 person
வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஆறுமுகம் சார்!
LikeLike
மிக நல்ல பதிவு அக்கா, முக்கியமாக தெரிய வேண்டிய விடயம்.தீர்வுகளையும் சொன்னதும் மிக மிக நல்ல விடயம் அக்கா 🙂
LikeLiked by 1 person
வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சரவணா 🙂
LikeLike
அனைவரும் அறிந்து கொள்ள நலம் பயக்கும் தகவல்கள்… நன்றி…
LikeLiked by 1 person
வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தனபாலன் சார் 🙂
LikeLike
அற்புதமான பதிவை தந்ததிற்கு நன்றி மஹா மேடம்.
LikeLiked by 1 person
வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி பிரபு சார் 🙂
LikeLike
ஒவ்வொரு பதிவும் தூள்!
எனது அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுகிறேன். நான் வகுப்புகள் எடுக்கும்போது – ஒரு வகுப்பு ஒன்றரை மணி நேரம் – வாய் உலர்ந்து போவது எனக்கே தெரியும். அதனால் நிறைய நீர் குடிப்பேன். வகுப்பு நடக்கும்போது குடிக்க முடியாது. ஆனால் முடிந்த பின்னும், வகுப்பு ஆரம்பிக்கும் முன்னும் குடித்து விடுவேன். அதேபோல காபி, டீ சாப்பிட்டவுடனே நீர் குடித்துவிடுவேன். அந்த வாசனைகளும் வாயில் இருந்தால் எனக்கே பிடிக்காது.
தேவையான பதிவு இது. யாருக்கெல்லாம் அனுப்ப வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். எல்லோருக்குமே அனுப்பிவிடலாம்!
பாராட்டுக்கள் மஹா!
LikeLiked by 1 person
நன்றி ரஞ்சனி அம்மா! உங்கள் பின்னூட்டம் மேலும் பல அற்புதமான புதிய பதிவுகளை எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது 🙂
LikeLike
பிங்குபாக்: தூ…….தூ…….போ……போ………! | ranjani narayanan
“…., ஆதலால், வாய் துர்நாற்றத்தை தவிர்க்க விரும்புவோர்,
1)நிறைய தண்ணீர் குடியுங்கள்
2)காபியை தவிர்த்து விட்டு , பால் சேர்க்காத தேநீர் அருந்த பழகி கொள்ளுங்கள்
3)புகை பிடிப்பதை நிறுத்துங்கள். புகையிலையை தவிருங்கள்
4)மது குடிப்பதை நிறுத்துங்கள்
5)நல்ல, வாயில் போட்டு மெல்லும் கோந்தை(Chewing gum) சாப்பிட்ட பின்னே உபயோகியுங்கள்.”
(இல்லையேல் திருவள்ளுவருக்கிணங்க,
“யாகாவா ராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு”)
வாயை திறவாமலிருப்பது நன்று
LikeLike
ஹா ஹா ஹா… திருவள்ளுவர் காட்டிய வழி உண்மையிலேயே சிறந்த வழி 😀
LikeLike