பொறித்த எண்ணெயை மறுஉபயோகம் செய்யலாமா??

oil4

வீடுகளில், சமையல் செய்யும் போது ஒரு முறை பொறிக்க பயன் படுத்திய எண்ணெயை மறு உபயோகம் செய்வதுண்டு. யாரும் மனம் உவந்து அதை கீழே கொட்டுவதில்லை. தாங்கள் கற்று கொண்ட சிக்கன பாடத்தை எல்லாம் இந்த எண்ணெயை எப்படி வீணாக்காமல் உபயோகிக்கலாம் என்பதில் தான் காண்பிப்பர். இப்படி மறுபடி மறுபடி எண்ணெயை உபயோகிக்கும் பொழுது , அதனால் எவ்வளவு உடல் நலக்குறைபாடுகள் வரும் என்பதை ஒரு தடவையாவது யோசித்ததுண்டா? அப்படி எப்பொழுதும் யோசித்ததில்லை என்றால் பரவாயில்லை, காலம் தாழ்ந்து போய் விடவில்லை ,இதை படித்து விட்டு சற்றே யோசியுங்கள்!

oil6

ஒவ்வொரு தடவை சமையல் செய்யும் போதும் புதிய எண்ணெயை உபயோகம் செய்வதே நலம் பயக்கும். ஏற்கனவே உபயோகித்த எண்ணெயை மறு உபயோகம் செய்யும் போது , அதன் வாசனை , நிறம் , சுவை எல்லாமே மாறி போய் விட்டிருக்கும்!. அத்தகைய எண்ணெய் , வாசனையும், சுவையும் மாறியதோடு அல்லாமல் அதனுள் புற்றுண்டாக்கக்கூடிய (Carcinogenic free radicals) மூலக்கூறுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.அத்தகைய எண்ணெயில் பொறிக்கும் பொழுது , அம்மூலக்கூறுகள் உணவில் உறிஞ்சப்பட்டு , யாரேனும் துரதிர்ஷ்டமான மனிதரால் உட்கொள்ள படுகிறது!

oil21  oil11

மனிதர்கள் உடம்பில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ஆக்சிஜன் மூலக்கூறுகள்(Oxygen Molecules ), புகையிலையின் தாக்கத்தாலோ , கதிர்வீச்சாலோ , மறு உபயோகம் செய்த எண்ணெயில் பொறித்து எடுக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டதாலோ, மின்னேற்றம்(Electrically charged) அடைந்து விடுகிறது. அத்தகைய ஆக்சிஜன் மூலக்கூறு , தான் இழந்த மின் அணுவை(Electron )  மீட்டெடுக்க , வேற ஆக்சிஜன் மூலக்கூறுகளுடன் எதிர்வினை புரிந்து அவற்றின் மின் அணுவை திருட பார்க்கும்! இது ஒரு தொடர் விளைவு (Chain Reaction ) போல் தொடர்ந்து நடக்கும். அவ்வாறு நடக்கும் போது , நம் உடம்பில் உள்ள உயிரணுக்களுக்கு (Cells )பெருத்த சேதம் விளையும். இவையே, இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் , புற்று நோய்களுக்கும்  மூலக்காரணம்!

oil12        images   oil18        oil13

ஆக்சிஜெனேற்றத்தடுப்பான்(AntiOxidants ) மிகுந்த உணவு வகைகளை , நம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் சேர்த்து கொண்டால் மட்டுமே, இத்தகைய பிரச்சனைகளில் இருந்து ஓரளவு தப்பித்து கொள்ள முடியும்! அதாவது வைட்டமின் A  நிறைந்த உணவுகள் ,வைட்டமின் C நிறைந்த பழங்களை தவறாமல் உட்கொள்ள வேண்டும்!

images (1)

 

ஆனால், எண்ணெய் விற்கிற விலைக்கு , ஒவ்வொரு தடவையும் புதிய எண்ணெய் உபயோகிக்க முடியுமா என்று நீங்கள் நினைத்தால், கீழ்கண்ட குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் உதவும்…
1. ஒரு தடவை உபயோகித்த எண்ணெயை பத்திரமாக சேமித்து வைப்பதற்கு முன்னே , அதை ஆற வைத்து , பின் நல்ல சுத்தமான வடி கட்டியினால் , எந்த உணவு பொருட்களும் இன்றி வடித்து , பின் சேமிக்கவும்.
2. எண்ணெயை தேவை இல்லாமல் அதிக நேரம் அடுப்பில் காய விடாதீர்கள்.
3. வேற வேற எண்ணெய்களை ஒன்றாக ஊற்றி சேமிக்க கூடாது.
4. நல்ல குழுமையான இடத்தில் எண்ணெயை சேமித்து வையுங்கள்.
5. எண்ணெயை மறுஉபயோகம் செய்து பொறிக்க நினைக்கும் போது , தாமிரத்தால் ஆன கடாயோ இல்லை இரும்பினால் ஆன கடாயோ உபயோகிக்காதீர்கள்.. ஏனெனில் அவை எண்ணெயை வேகமாக கெட்டு போக செய்யும்.

oil5

உணவுகளை 375 டிகிரி பாரன்ஹீட்(190  டிகிரி செல்சியஸ் ) அல்லது அதற்கும் மேலான வெப்பத்தில் பொறிக்கும் பொழுது , எண்ணெயில் HNE ( 4-hydroxy-2-trans-nonenal) என்ற நச்சு பொருள் உண்டாகி விடுகிறது. ஒரு தடவை எண்ணெயை பொறிப்பதற்கு உபயோகித்த உடனேயே இது தோன்றி விடும். நாம் மிச்சம் பிடிக்கிறோம் பேர்வழி என்று திரும்ப திரும்ப அந்த எண்ணெயை உபயோகிக்கும் போது HNE நிறைய உண்டாகி விடுகிறது.
பக்கவாதம்(Stroke ), பெருந்தமனி தடிப்பு(Atherosclerosis), கெட்ட கொழுப்பு(Bad Cholesterol ), அல்சைமர்(Alzheimer’s), பார்கின்சன்(Parkinson’s) மற்றும் இதர கல்லீரல் நோய்களுக்கு இந்த HNE நச்சு பொருள் தான் முக்கிய காரணம்!

food-safety-issues-in-bangladesh-10-638

 

சரி, இந்த HNE நச்சு பொருளை எப்படி தவிர்க்கலாம் என்று பார்க்கலாம்..
1. எண்ணெயை 375 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக காய விடாதீர்கள்.
2. எந்த எண்ணெயில் லினோலிக் அமிலம்(Linoleic Acid ) குறைவாக இருக்கிறதோ அந்த எண்ணெயை வாங்கி பொறிப்பதற்கு பயன்படுத்துங்கள். ஆலிவ் எண்ணெயில் லினோலிக் அமிலம் குறைவாக இருக்கும். சோள எண்ணெய்(Corn oil ) , சூரியகாந்தி எண்ணெய்(Sunflower oil ) போன்றவற்றில் லினோலிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கும். நன்கு பொறித்த உணவை சாப்பிட விருப்பம் கொள்பவர்கள், ஆலிவ் எண்ணெயை பயன் படுத்துங்கள். சோள எண்ணெயையும் , சூரியகாந்தி எண்ணெயையும் விட்டு தூர விலகுங்கள்.

oil1 oil3

துன்பங்கள் வரும் முன்னே விழித்தெழுவோம்!  நம் சுற்றத்தை காப்போம்!

This entry was posted in அறிவியல், வேதியியல் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to பொறித்த எண்ணெயை மறுஉபயோகம் செய்யலாமா??

  1. பரிமாணம் சொல்கிறார்:

    எனக்கும் ஒரு முறை பாவித்த என்னை மீண்டும் பாவிப்பதில் இஷ்டம் இல்லை இதுவரை அப்படி பாவித்தது இல்லை, இதில் எவ்வளவு பிரச்சினை இருக்கும் என்பது இப்போது தானே தெரிகிறது. நல்ல பதிவு அக்கா

    Liked by 1 person

  2. இனி இது போல் செய்வதாக வீட்டில் சொல்லி விட்டார்கள்… நன்றி…

    Liked by 1 person

  3. பிரபுவின் சொல்கிறார்:

    வாவ் மேடம்.நல்ல பதிவு.வீட்டில் சொல்லியாச்சு.உணவகங்களில் யாரிடம் சொல்லுவது.நாங்கள் சொன்னால் தம்பி நீங்கள் சாப்பிடாவிட்டால் பரவாயில்லை எங்கட பிழைப்பைக் கெடுக்காதீர்கள் என்று சொல்லிவிடுவார்கள். என்ன இருந்தாலும் மேலைத்தேய அரசாங்கங்களை நாங்கள் பாராட்ட வேண்டும்.ஜப்பான் தவிர்ந்த ஆசிய நாடுகளின் அரசாங்கங்கள் இதைச் செவிமடுக்குமா?
    நன்றி மஹா மேடம் உங்கள் சமூக அக்கறைக்கு.

    Liked by 1 person

பின்னூட்டமொன்றை இடுக