முகப்பொலிவை தரும் கிரீம்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு

fair2

முகம் பொலிவுடன் விளங்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படும் ஒன்று! தங்கள் முகம் மாசு மருவின்றி அழகாக , வெள்ளையாக பளிங்கு போல மினுங்க வேண்டும் என்பது தான் 90 % பெண்களின் அவா! தங்கள் முகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட பளிச் என்று வெள்ளையாக இருக்க வேண்டும் என்றே பலரும் ஆசைப்படுகின்றனர்! இந்த ஆசையை மென்மேலும் தூண்டி தங்கள் வியாபாரத்தை பெருக்கி கொள்கின்றனர் முகப்பொலிவு கிரீம் தயாரிப்பாளர்கள்!

fair3

இந்த முகப்பொலிவு கிரீம்கள் நிஜமாகவே நம் சருமத்தை வெள்ளையாக்குதா?? இது எப்படி வேலை செய்கின்றது என்று பார்க்கலாம். நம் சருமத்தில் மெலனின்(Melanin) என்று ஒரு நிறமி உண்டு.நம் தோலுக்கு நிறத்தை கொடுப்பது இந்த மெலனின் தான்! வெயிலில் நம் தோல் கறுத்து போவதற்கு முக்கிய காரணம் இந்த மெலனின் தான். மெலனின் அளவு அதிகரிக்கும் போது தோல் கறுத்து போகும்.. மெலனின் அளவு கம்மியாக இருக்கும் போது தோல் வெளுப்பாக தெரியும்! இந்த முகப்பொலிவு கிரீம்கள் எப்படி வேலை செய்கிறது என்றால் , நம் சருமத்தில் மெலனினை அதிகரிக்க செய்யும் தைரோசினேஸை(Tyrosinase ) தடுப்பதன் மூலம் வெள்ளையாக்குது! இவ்வாறு தைரோசினேஸை தடுப்பதற்காக கிரீம்களில் சேர்க்கப்படும் வேதியல் பொருள் ஹைட்ரோகுவினோனை(Hydroquinone ). அது போக விட்டமின் A  வை வழங்கும் ரெட்டினால்(Retinol ), நம் தோலில் உள்ள பழைய செல்களை அப்புறப்படுத்துவதோடு நில்லாமல் , மெலனின் அதிகம் இருக்கும் செல்களையும் அப்புறப்படுத்துவிடுகிறது . இவற்றோடு  சேர்க்கப்பட்டிருக்கும் சன் ஸ்க்ரீன் லோஷன் , புற ஊதா கதிர்களை தடுத்து நிறுத்தி விடுகிறது. ஆக , நம் சருமத்தின் நிறம் இந்த முகப்பொலிவு கிரீம்களால் சிறிது அதிகரித்தது போன்ற தோற்றத்தை தருகிறது! நாம் இந்த முகப்பொலிவு கிரீம்களை உபயோகம் செய்வதை நிறுத்தி விடும் போது , நம் சருமம் திரும்பவும் பழைய நிறத்துக்கு திரும்புகிறது! ஆக , முகப்பொலிவு கிரீம்கள் தருவது தற்காலிக தீர்வு மட்டுமே!

ஆனால் ஒன்றை இந்த நிமிடத்தில் புரிந்து கொள்வது நலம். நம் சருமத்தின் இயற்கையான நிறத்தை கண்டிப்பாக மாற்ற முடியாது! இந்த முகப்பொலிவு கிரீம்கள் நம் சருமத்தின் மேலோட்டத்தில் மட்டுமே செயல் புரிகின்றது! இது போல மெலனின் அதிகரிப்பை வேதியல் பொருட்களால் தடுத்து நிறுத்தி விடும் போது ,சருமத்தில் கேன்சர் போன்ற புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்! இந்த ஹைட்ரோகுவினோனை(Hydroquinone) நிறைய நாடுகள் தடை செய்து உள்ளன! நிறைய முகப்பொலிவு கிரீம்களில் ஹைட்ரோகுயினோனோடு(Hydroquinone ), ஸ்டீராய்டுகள் (Steroid ) சேர்க்கபடுகின்றன. அதனை நாம் நம் சருமங்களில் உபயோகிக்கும் போது , ஆரம்பத்தில் நன்றாக  வேலை செய்வது போல இருந்தாலும் , நெடுங்காலம் உபயோகிக்கும் போது  தோல் புற்று நோய் வருவது உறுதி! மேலும் கல்லீரல் பாதிப்புகள் உண்டாகும். பெட்னோவேட்(Betnovate ) போன்ற ஸ்டீராய்டுகள் உள்ள முகப்பொலிவு கிரீம்களை உபயோகிக்கும் போது நாளடைவில் முகம் பாழாய் போய் விடும். மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல் இதனை முகத்திற்கு உபயோகிக்கவே கூடாது!

fair6Skin-problem-Facebook

இந்த ஹைட்ரோகுயினோனை(Hydroquinone ) இல்லாது தயாரிக்கப்படும் முகப்பொலிவு கிரீம்களில் மெர்குரியை (Mercury )அதிக அளவு சேர்க்கின்றனர்! இது மிகக்  கொடுமையானதொரு விஷயம். மெர்குரி சேர்த்த கிரீம்களை உபயோகிப்பவர்களுக்கு தோல் நிற மாற்றம் உண்டாகும் . சரும எரிச்சலும் , அரிப்பும் உண்டாகி , காலத்துக்கும் அழியாத வடுக்களை முகத்தில் உண்டாக்கி விடும். மேலும் , மெர்குரி ஒரு நச்சு பொருள். அது நம் நரம்பு மண்டலத்தில் பாதிப்புகள் உண்டாக்கி விடும். அதனால் பதட்டம், மன அழுத்தம் , மன நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்!

fair1

முகப்பொலிவு கிரீம்கள் , நாளடைவில் நம் சருமத்தை  ஒளியினால் கூச்சம் ஏற்படும் நிலைக்கு(Photo  Sensitive  Skin ) தள்ளி விடும்.அத்தகைய நிலைக்கு ஆளாகும் போது , வெயிலில் வெளியே சென்று வருவது சிரமத்திற்குரிய காரியமாகி விடும்.  சரும எரிச்சல் , பருக்கள் , அதனால் உண்டாகும் வடுக்கள் என்று நம் சருமத்தை ஒரு வழி பண்ணி விடும்!

P0003214

அப்போ முகப்பொலிவு கிரீம்களை உபயோகிக்கவே கூடாதா என்று கேட்டால் , நான் சொல்லுவேன்.. உபயோகியுங்கள் , ஆனால் என்னென்ன பொருட்கள் சேர்த்து தயாரித்து இருக்கிறார்கள் என்று உற்று பார்த்து வாங்குவது நலம் தரும். ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலங்கள்(Alpha -Hydroxy Acid ) என்று புதியதாய் ஒரு பொருள் கொண்டு முகப்பொலிவு கிரீம்களை  தயாரித்து வருகின்றனர். கரும்பு , மோர் போன்றவற்றில் இருந்து இந்த அமிலம் எடுக்கப்படுகின்றது. இயற்கையான பொருட்களில் இருந்து எடுக்கபடுவதால் , சருமத்திற்கு  எந்த வித பாதிப்பும் இல்லை. இவை சருமத்தில் இறந்த செல்களை அப்புறப்படுத்துவதோடு நில்லாமல் மெலனின் உற்பத்தியையும் தடுக்கிறது .

சிகப்பழகு/முகப்பொலிவு கிரீம்கள் உபயோகிப்பதால் சருமத்தின் இயற்கையான நிறம் மாறுவதில்லை. கிரீம் தயாரிப்பாளர்கள் தாங்கள் என்னென்ன மூலப்பொருட்கள் உபயோகம் செய்து இருக்கிறோம் என்ற முழு விவரத்தை அச்சடித்து தருவதில்லை. மெலனின் அதிகமாக காணப்படும் சருமம் , அதாவது கறுத்த நிறமுடைய சருமமே ஆரோக்கியமான சருமம்! கறுத்த நிறமுடைய சருமத்தினரை தோல் வியாதிகள் அண்டுவதில்லை.

 

சரும பிரச்சனைகளை  தீர்ப்பதற்கு சரும மருத்துவரை  அணுகி பயன் பெறுங்கள்! நீங்களாக எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள்! ஸ்டீராய்டு  உள்ள கிரீம்களை உபயோகித்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதை தலையை சுற்றி தூக்கி எரிந்து விடுங்கள். இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உங்கள் சருமத்தை பாதுகாத்து கொள்ள முயலுங்கள்.

 

Advertisement
This entry was posted in அறிவியல், வகைப்படுத்தப்படாதது, வேதியியல் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

11 Responses to முகப்பொலிவை தரும் கிரீம்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு

 1. RajalakshmiParamasivam. சொல்கிறார்:

  சிகப்பழகு க்ரீம்களா ? வேண்டவே வேண்டாம் என்று எட்டு காத தூரம் ஓட வேண்டும் போலிருக்கிறதே ,நன்றி நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு.

  Liked by 1 person

  • mahalakshmivijayan சொல்கிறார்:

   ஆமாம் ராஜி மேடம்! இந்த Betnovate கிரீமை எல்லாம் நான் உபயோகித்து இருக்கிறேன்! ஏதோ ஒரு அலர்ஜிகாக டாக்டர் பரிந்துரை செய்திருந்தார். உபயோகித்த சில நாட்களிலேயே எல்லாம் சரி ஆகிடும்! அவ்வளவு சக்தி வாய்ந்தது அது! நல்ல வேளை அதன் பிறகு அதை நான் உபயோகிக்க வில்லை! நினைத்தாலே கதி கலங்குகிறது!

   Like

 2. நம் சருமத்தின் இயற்கையான நிறத்தை கண்டிப்பாக மாற்ற முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டியதில் தான் சிக்கல்…!

  Liked by 1 person

  • mahalakshmivijayan சொல்கிறார்:

   யாரு சார் புரிந்து கொள்கிறார்கள்! சிகப்பழகு தான் அழகு என்ற எண்ணம் மாறும் வரை இது போன்ற அவலங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்! வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்!

   Like

 3. பிரபுவின் சொல்கிறார்:

  மிகச் சிறப்பான பதிவு இது.பத்திரிகையாளர்கள் இந்தப்பதிவை மஹா மேடத்தின் அனுமதியுடன் மீள்பிரசுரம் செய்ய வேண்டும்.
  முகம் பொலிவுடன் விளங்க வேண்டும் என்று ஆசைப் படுபவர்கள் இதன் ஆபத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.
  நன்றி மஹா மேடம் உங்கள் சமூக அக்கறைக்கு.

  Liked by 1 person

  • mahalakshmivijayan சொல்கிறார்:

   இயற்கையாய் அமைந்த நிறத்தை யாரும் மாற்ற முயல கூடாது! அவ்வாறு மீறும் போது அதற்கான விளைவுகளை சந்தித்து தான் ஆக வேண்டும்.. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி பிரபு சார் 🙂

   Like

 4. ranjani135 சொல்கிறார்:

  இளம் பெண்கள் மட்டுமல்ல, இப்போது ஆண்களுக்கும் இதுபோன்ற கிரீம்கள் வந்துவிட்டனவே! எல்லோருமே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கூகிள்+இல் பகிர்ந்து கொண்டிருக்கிறேன், மஹா!

  Liked by 1 person

  • mahalakshmivijayan சொல்கிறார்:

   வாங்க ரஞ்சனி அம்மா! ஆம் அம்மா.. இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் விழிப்புணர்வோடு இருப்பது நல்லது ! ஆண் என்ன பெண் என்ன எல்லோரையும் சிகப்பழகு என்னும் மந்திரத்தை ஓதி ஆட்டுவிக்க தான் வந்து விட்டதே பல பல கிரீம்கள்! வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அம்மா! கூகிள் பிளசில் பகிர்ந்தமைக்கும் என்னுடைய நன்றிகள் 🙂

   Like

  • mahalakshmivijayan சொல்கிறார்:

   வாங்க ரஞ்சனி அம்மா! நான் விடாது சிகப்பு என்று ஒரு பதிவை போட்டேனே, நியாபகம் இருக்கிறதா?? அந்த கேஸ் பிரச்சனையை முற்றிலும் தீர்த்து வைத்தது என் தூண்டல் அடுப்பு தான் 🙂 எந்த ஒரு பிரச்சனையும் இதுவரை எனக்கு இந்த அடுப்பால் வந்தது இல்லை.. நீங்களும் கண்டிப்பாக வாங்குங்கள்! நான் கியாரண்டி 🙂

   Liked by 1 person

 5. Geetha Sambasivam சொல்கிறார்:

  எந்த காஸ்மெடிக்கும் பயன்படுத்தாமலேயே எனக்கு ஃபோட்டோ சென்சிடிவ் ஸ்கின்! 🙂 நான் உபயோகித்தது கஸ்தூரி மஞ்சள், சந்தனம், வசம்பு ஆகியவையே. அதிலும் பவுடர் கூடப் போட மாட்டேன். ஃபவுன்டேஷன், க்ரீம் என்ற பேச்சுக்கே இடமில்லை. என்னோட ஒரே முக அழகு க்ரீம் கசகசா தான். அதைப் பாலில் ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவிக் கொண்டால், முக நிறத்தில் மாறுதல் தெரியும், பருக்கள் வராது.

  அதிகம் பருக்கள் வந்தால் கஸ்தூரி மஞ்சள், வசம்பு ஆகியவற்றைச் சந்தனக்கல்லில் அரைத்து, சந்தனப் பவுடரோடு கலந்து இரவு படுக்கையில் முகத்தில் தடவிக் கொண்டு படுக்கவும். காலை வெதுவெதுப்பான வெந்நீரால் கழுவி விட்டுப் பின்னர் தேங்காய் எண்ணெய் தடவி ஊறிக் குளிக்கவும். முகத்திற்கு சோப் போடக் கூடாது. கடலை மாவு அல்லது பயத்தம் மாவு மட்டுமே போடணும். முன்னெல்லாம் நல்ல சந்தனக் கட்டை கிடைத்தது. ஆகையால் சந்தனமும் நான் அரைத்துக் கொள்வேன். இப்போதெல்லாம் சந்தனக் கட்டை என அகில் கட்டையைக் கொடுக்கிறாங்க. சுத்தமான சந்தனக் கட்டை கிடைப்பது அரிது. ஆகவே நல்ல சந்தனப் பொடியாக வாங்கணும். குப்பைமேனி இலையையும், துளசி இலையையும், வேப்பிலையையும் பறித்துக் கழுவிக் கொண்டு நன்கு நைசாக அரைத்து உடல் முழுவதும் முகம் உட்பட பூசிக் கொண்டு குளிக்கலாம். இதிலும் மாற்றம் தெரியும்.

  Liked by 1 person

  • mahalakshmivijayan சொல்கிறார்:

   வணக்கம் கீதா சாம்பசிவம் மேடம்! உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி! எனக்கும் இயற்கையாகவே சென்சிடிவ் சருமம் தான்! எந்த ஒரு கிரீமும் உபயோகிக்க மாட்டேன்! நீங்கள் சொல்வது போல் மஞ்சளும் , பயத்த மாவுமே துணை!வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி! பலருக்கும் உங்கள் கருத்துரை உபயோகமாய் இருக்கும் 🙂

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s