மிரட்டும் குறட்டை

snore1

குறட்டை சத்தம் உலகில் யாருமே கேட்க விருப்பப்படமாட்டார்கள்.. ஏனெனில் அது அவ்வளவு கொடியது! குறட்டை சத்தத்துக்கு தூக்கத்தை தொலை தூரத்துக்கு விரட்டும் சக்தி உண்டு. அவ்வாறு தூக்கம் தொலைத்தவர்களுக்கு வாழ்க்கை வெறுத்து போவதும் உண்டு. இவ்வாறு குறட்டையையும் குறட்டை விடுபவர்களையும் குறை சொல்வதை சற்றே நிறுத்தி விட்டு , எதனால் குறட்டை வருகிறது, குறட்டை விடுபவர் களை அது எந்த அளவு கஷ்டத்தை தருகிறது , அதை நிறுத்த ஏதேனும் வழி உண்டா , அது நல்லதா இல்லை கெட்டதா என்று சற்று விரிவாக நோக்குவோம்!

snoreairblocked

நம் மூச்சு இயக்கத்தில் ஏதேனும் தடங்கல் வரும் போது எரிச்சலூட்டுகிற சத்தத்தோடு வெளி வருவதே இந்த குறட்டை. நம் பின் வாயில் ஒரு மிக பலவீனமான திசு உண்டு. சுருங்கிய காற்று குழாயின் வழியே மூச்சு காற்று வேகமாக உள் நுழையும் போது இந்த திசு அதிர்வுறுகிறது. இந்த திசுவானது நாம் உறங்க ஆரம்பித்தவுடன் படிப்படியாக தளர ஆரம்பிக்கும். அதுவும் நாம் படுத்துக் கொள்ளும் நிலைகளின் போது இந்த திசுவானது காற்று குழாயினுள் தளர்ந்து விழுந்து கிடக்கும். இதனால் தான் தூங்கும் போது மட்டுமே குறட்டை சத்தம் கிளம்புகிறது. மேலும் குறட்டை சத்தம் தூங்குபவருக்கு கேட்க வாய்ப்பே இல்லை. நன்கு குறட்டை விட்டு தூங்கி எழுந்த ஒருவரிடம் சென்று , ‘என்னப்பா இப்படி குறட்டை விடுறீங்களே பா ??’ என்று கேட்டு பாருங்கள்.. கற்பூரத்தை அடித்து சத்தியம் செய்து மறுத்து, இல்லவே இல்லை என்று அடித்து பேசுவர்!

no-alcohol

சிலர் மிகவும் சத்தமாக குறட்டை விடுவர். அதற்கு முக்கிய காரணம் அவர்களது உடலமைப்பு! அவர்களது வாய் , தாடை, காற்று குழாயின் அமைப்பு எல்லாம் குறட்டை விடுவதற்கு தோதாய் அமைந்திருக்கும். குண்டான உடலமைப்பும் ஒரு முக்கிய காரணம் தான். படுப்பதற்கு முன்னே மதுபானம் அருந்துவதும் குறட்டையை அழையா விருந்தாளியாக வரவேற்கும்!

snore2

குறட்டை சத்தம், உடன் படுத்திருப்பவரின் தூக்கத்தை எல்லாம் கெடுக்கிறது என்ற குற்றச்சாட்டு ஒரு புறமிருக்க , அது உடலில் மறைந்திருக்கும் கடுமையான பிரச்சனைகளுக்கு எச்சரிக்கை மணி அடிப்பது போன்றதாகவே பார்க்கப்பட வேண்டும்! இந்த குறட்டைக்கும் , உடம்பில் தோன்றும் , உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளுக்கும் , இருதயப் பிரச்சனைகளுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் உண்டு என்ற சர்ச்சை பல காலமாக மருத்துவ சமூகத்தில் நிலவி வருகிறது! சிலர் குறட்டை விடும் போது , மிக பயங்கரமாக தங்கள் மூச்சையே நிறுத்தி விடுகின்றனர். அத்தகைய நிலைமையை தூக்கத்தில் மூச்சு திணறல் (Sleep Apnea ) என்று குறிப்பிடுவர். இது உண்மையிலேயே மிக மோசமான ஒரு நிலை!

images (2)

தடைச்செய்யும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் நோய்(Obstructive sleep apnea Syndrome) என்பது நிஜமாகவே ஒரு பயப்பட வேண்டிய நோய் தான். அசாதாரணமாக நாக்கு தசைகளில் ஏற்படும் தளர்வினால், அத்தசைகள் காற்றுக் குழாயை காற்று போய் வர முடியாமல் சிக்கென்று அடைத்து விடும்! நன்றாக புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் ஒரு பாட்டிலை , மூடி கொண்டு மூடுவது போன்று !

spice_bottle_with_cork_top-product_1x-1403634968

உடனே , உடம்பின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பு விழித்து கொண்டு விடுகிறது… உடனே நமக்கு முழிப்பு தட்டி விடுகிறது. இத்தகைய மூச்சு திணறலும் , அதன் பின்னே முழிப்பு தட்டுவதும் ,ஒரு மணி நேரத்துக்குள் பல தடவை ஏற்படும். இவ்வாறு தூக்கமானது , முழுமையாக இல்லாது , அரை குறையாக இருப்பதால் அவர்கள் எப்பொழுதும் மிக சோர்வாக உணருவார்கள்!

இந்த நோய்க்கான அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம். இந்நோய் கண்டவர்களுக்கு காலை நேரத்தில்அதிகப்படியான தூக்கம் வரும். போக்குவரத்து விபத்துகள் அதிகமாக நடப்பது இது போன்ற நோய்களால் தான். இதை நாம் கண்டு பிடிக்க தவறி விட்டோம் என்றால், நாம் நமக்கு நாமே தீங்கு செய்வதோடு நில்லாமல் அடுத்தவருக்கும் தீங்கு செய்து விடுவோம்.

snore3      aaa-drowsy-driving1

இது போன்ற ஆபத்தான நோயில் இருந்து ஒருவரை காப்பாற்ற முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும். இத்தகைய ஆபத்தான நோய்க்கும் ஆபத்பாந்தவனாக வந்திருப்பது தான் தொடர் நேர்மறையான சுவாசவழி அழுத்தம்(Continuous positive airway pressure). இதை பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.

cpap-machine (1)

இந்த சிகிச்சையின் போது , சிகிச்சை பெறுபவர் ஒரு முகமூடியை அணிந்து கொள்ள வேண்டும். அந்த முகமூடியோடு ஒரு மின் எக்கியை(Electrical Pump) இணைத்திருப்பர். அந்த மின் எக்கியானது  அந்த அறையில் உள்ள காற்றை சிறிது அழுத்தம் கொடுத்து நோயாளியின் மூக்கில் தொடர்ந்து செலுத்தும். அவ்வாறு காற்றை சிறிது அழுத்தம் கொடுத்து  செலுத்துவதால் , நோயாளியின் தொண்டையில் எந்த அடைப்பும் இன்றி, மூச்சுத்திணறல் எதுவும் இல்லாது ,  குறட்டை இன்றி , நிம்மதியாய்  உறங்குவர்!

snore6      CPAP-machine9701

அடிநாச் சதையின் (Tonsils ) வளர்ச்சி காரணமாக சிரமப்படுபவர்களுக்கு , பொதுவாக குழந்தைகளுக்கு இந்த தடைச்செய்யும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் நோயை கட்டுப்படுத்த அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்துவர்!

சிலருக்கு பிறவியிலேயே தாடைகளின் அமைப்பு ஒழுங்கற்று அமைந்திருக்கும்.. அவர்களுக்கும் குறட்டை தொந்தரவு இருக்கும். அத்தகைய பிரச்சனை உள்ளவர்களுக்கு புகைப்படத்தில் இருப்பது போன்ற துண்டுகளை வாயில் பொருத்துவர். அவ்வாறு பொருத்தப்படும் போது காற்று குழாய்களில் தங்கு தடையின்றி காற்றோட்டம் இருக்கும் . குறட்டையும் தடுக்கப்படும். அறுவை சிகிச்சைக்கு அவசியம் எதுவும் இருக்காது!

anti-snoring-mouthpiece    Stop-Snoring-Mouthpiece-Diagram
இந்த குறட்டையையும், குறட்டை விடுபவர்களையும் குறை சொல்வதை விட்டு விட்டு, அவர்களின் இக்குறையை களைய உங்களால் ஆனா உதவிகளை செய்ய முயலுங்கள்!!

 

This entry was posted in அறிவியல், வகைப்படுத்தப்படாதது and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to மிரட்டும் குறட்டை

 1. பரிமாணம் சொல்கிறார்:

  குறட்டையைப் பற்றி நல்ல பதிவு அக்கா 🙂 தெரியாத பலவிடயங்களை பற்றி சொன்னதற்கு. மற்றும் குறட்டை பற்றிய தீர்வுகளையும் சொன்னதற்கு நன்றி. குறட்டையை பற்றி நினைத்தால் எனக்கு ஞாபகம் வாறது இந்த விவேக்கோட “குறட்டை அரங்கம்” காமடிதான்.. 🙂

  Liked by 1 person

 2. இதற்கான சிகிச்சையை அறிந்தேன்… நன்றி…

  Liked by 1 person

 3. chollukireen சொல்கிறார்:

  விவரங்கள் தெறிந்து கொண்டேன். நன்றாக இருக்கிறது. அன்புடன்

  Liked by 1 person

 4. yasar arafath சொல்கிறார்:

  யோகா, மூச்சு பயிற்சி மூலம் குறட்டையை கட்டு படுத்தலாமா

  Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s