கொசுக்கடி குற்றம் நடந்தது என்ன??

images

கொசு இந்த வார்த்தையை கேட்டாலே அவனவன் பயந்தடித்து ஓடியே போயிடுவான்… அவ்வளவு பயம் அதன் மேலே எல்லோருக்கும். சும்மாவா.. நம் இரத்தத்தை அல்லவா குடிக்க வருகிறது! நம் இரத்தத்தை குடித்தால் கூட பரவாயில்லை, குடித்து முடித்து விட்டு நமக்கு பரிசாக வியாதியையும் அல்லவா குடுத்து விட்டு செல்கிறது! ஆயிரத்து இருநூற்றுக்கும் அதிகமான இன கொசுக்கள் இருக்கின்றனவாம். ஆனால் எல்லா வகை கொசுக்களும் மனிதனின் இரத்தத்தை உண்டு உயிர் வாழ்பவை அல்ல..
culex

anopheles

images (9)

மொத்த உலகத்திலும் முக்கியமான கொசு இனங்கள் மூன்று! அவை கியூலெக்ஸ் , அனோபீலிஸ் மற்றும் ஏடீஸ் . இந்த மூன்று கொசு இனங்களிலும் பெண் கொசு மட்டுமே இரத்தத்தை உறிஞ்சி குடித்து உயிர் வாழ்பவை . ஆண் கொசுக்கள் பூக்களில் உள்ள தேனையும் , தாவரத்தின் உயிர் சாரையும் உறிஞ்சி உயிர் வாழ்பவை. கொசுவானது ஒரு தடவை நம்மை கடிக்கும் போது நம் இரத்தத்தின் ஒரு துளியில் ஐந்தில் ஒரு பங்கை மட்டுமே உறிஞ்சிகிறது! எதற்காக இந்த பெண் கொசுக்கள் இரத்தம் தேடி அலைகின்றன தெரியுமா?? ஏன் என்றால் பெண் கொசுக்களுக்கு முட்டை இடுவதற்கு நம் இரத்தத்தில் உள்ள புரதம் தேவை படுகின்றது.

mosquito_bite1

கொசு நம்மை கடிக்கும் போது என்னவெல்லாம் ஆகுது என்று பார்க்கலாம்.. கொசு நம் கைகளில் அமர்ந்து தன்  ஊசி  போன்ற உறிஞ்சியை கொண்டு நம் தோலில் முன்னும் பின்னும் குத்துகிறது . அதனுடைய உறிஞ்சி இரத்த நாளங்களை அடைந்தவுடன் அதன் எச்சில் வழியாக ஒரு உறைதல் தடுப்பு மருந்தை நம் உடம்பினுள்ளே இரத்தம் உறையாமல் இருப்பதற்காக செலுத்துகிறது.. இந்த அந்நிய பொருளை நம் தோலுக்குள் செலுத்தியதற்கு எதிர்ப்பு காட்டும் விதத்தில் நம் உடம்பு போருக்கு தயாராகிறது!
mos

நம் நோய் எதிப்பு அமைப்பு ஹிஸ்டமைன்(Histamine ) என்ற வேதி பொருளை வெளியிடுகிறது. இந்த ஹிஸ்டமைன் கொசு கடித்த இடத்தில் அதிக இரத்தம் பாயும் விதமாய் இரத்த நாளங்களை விரிவடைய செய்கிறது. கொசு கடித்த இடம் தடித்து, சிவந்து விடுகிறது. மேலும் இந்த ஹிஸ்டமைன் கொசு கடித்த இடத்தில் உள்ள நரம்புகளை தூண்டி எரிச்சலூட்ட நமக்கு தாங்க முடியாத நமைச்சல் உண்டாகி அந்த இடத்தை அரித்து கொள்கிறோம் !ஒவ்வொரு தடவை நம்மை கொசு கடிக்கும் பொழுதும் நம் மூளைக்கு எச்சரிக்கை மணி அடிப்பது இந்த ஹிஸ்டமைன் தான்!!

skin

 

சிலருக்கு கொசு கடித்து விடும்  பொழுது  இந்த ஹிஸ்டமைன் தேவை இல்லாமல் அதிகம் சுரந்து, தோலில் ஆங்காங்கே செம்புள்ளிகளாய் தடித்து , அரிப்பெடுத்து அவர்களை பாடாய் படுத்தி விடும். இது போன்ற ஒவ்வாமை  பிரச்சனை உள்ளவர்களுக்கு மருத்துவர் ஹிஸ்டமைன் எதிர்ப்பு மருந்து கொடுத்து அவர்களை சரி படுத்துவார். தாங்க முடியாத தோல் அரிப்பை தவிர்க்க கேலமைன் லோஷன் பரிந்துரைப்பார்.

download (5)                   Calosoft_1

 

இந்த கொசுக்கள் தான் எத்தனை எத்தனை நோய் கிருமிகளை பரப்புகின்றன.. டெங்கு, சிக்கன்குனியா , மலேரியா என்று ஒவ்வொன்றும் மனிதர்களை கதிகலங்க வைப்பவை.. இந்த நோய்கள் எல்லாம் ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு கொசுக்கள் கடிப்பதினால் மட்டுமே பரவுகிறது.. சரி, இக்கிருமிகளால் கொசுவுக்கு எந்த பாதகமும் இல்லையா என்றால் கண்டிப்பாக இல்லை! நமக்கு தான் எல்லாவிதமான பாதிப்பும்!

இந்த எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்கள் கொசுக்கடி மூலம் பரவ வாய்ப்பிருக்கிறதா?? கொசுவும் ஊசி போன்ற உறிஞ்சி தானே உபயோகபடுத்துகிறது?? கண்டிப்பாக பரவாது… ஏனெனில் மற்ற வைரஸ் போல எய்ட்ஸ் வைரசால் ஒருவரின் உடம்பில் இருந்து வெளியே வந்த பின்னே உயிர் வாழ இயலாது… அந்த மட்டுக்கும் நாம ஏதோ புண்ணியம் செய்திருக்கிறோம்!

கொசு யாரை எல்லாம் அதிகம் கடிக்கிறது என்று பார்க்கலாம்.. அதிகம் குண்டாக இருப்பவர்களை, இருண்ட வண்ண ஆடைகளை உடுத்துபவர்களை, உடம்பு சூடாக இருப்பவர்களை  அதிகம் கடிக்கும். ஒரு மனிதனுடைய வியர்வை  நாற்றம் இங்கே அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதைப்  பொறுத்தும் கொசுக்கள் யாரை கடிக்க கடிக்க என்று தீர்மானம் செய்கின்றன!

images (11)      images (12)

சரி இந்த மோசமான கொசுக்கடியிலிருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று ஒரு பார்வை பார்க்கலாம். நம் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்க விடாமல் பார்த்து கொள்ள வேண்டும் .தண்ணீர் தொட்டிகளை மூடி  போட்டு மூடி வைக்க வேண்டும் .கொசுவை துரத்துவதற்கு என்றே, கொசுவை துரத்தும் கிரீம், லோஷன், கொசுவர்த்தி சுருள் , கொசு மருந்து தெளிப்பு, திரவ கொசு விரட்டி  என்று பல வகையான கொசு விரட்டிகள் இருக்கின்றன!.. இதிலே கிரீம் லோஷன் போன்றவை நம் தோலுக்கு  தடவும் பொழுது ஒவ்வாமை எதுவும் ஏற்படுகிறதா என்று கண்டு  பின்னே உபயோகப்படுத்துவது நலம் பயக்கும்.. இந்த கொசுவர்த்தி சுருள், கொசு மேட்  போன்றவை  கொசுவை விரட்டினாலும்  அதில் இருந்து வெளியேறும் புகையானது நம் மூச்சு குழாயில் பிரச்சனை ஏற்படுத்துபவை ! ஆக மொத்தம் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க நான் சிபாரிசு செய்வது மனிதருக்கு எந்த தீங்கும் செய்யாத கொசுவலையை!!!!

mos1 mos2 mos3    aidnet5_1415612545

 

இந்த புத்தாண்டில் இந்த மோசமான கொசுக்கடியில் இருந்து தப்பித்து ஆரோக்கியமான வாழ்வு வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

mosq

This entry was posted in வகைப்படுத்தப்படாதது and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to கொசுக்கடி குற்றம் நடந்தது என்ன??

 1. ஹிஸ்டமைன் பற்றிய தகவலை அறிந்தேன்… நன்றி…

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

  Liked by 1 person

  • mahalakshmivijayan சொல்கிறார்:

   வணக்கம் தனபாலன் சார்! இந்த ஹிஸ்டமைன் பற்றி தெரியாமல் , எதற்காக ஒவ்வாமை ஏற்படுகிறது என்று தெரியாமல் நான் என் குழந்தைகளோடு ரொம்பவே அல்லாடி இருக்கிறேன்! கொசு கடி ஒரு மனிதரை எந்த அளவு பாடு படுத்தும் என்பதை கண்கூடாக அனுபவித்து இருக்கிறேன்! சிறு குழந்தைகள் வைத்திருக்கும் தாயார் யாருக்கேனும் இப்பதிவு உதவினால் அளவற்ற மகிழ்ச்சி அடைவேன் 🙂

   Liked by 1 person

 2. பரிமாணம் சொல்கிறார்:

  நல்ல பதிவு அக்கா. இங்கயும் பயங்கர கொசுத்தொல்லை (உபரித்தகவல் – இங்க கொசு என்றது ஈ, நுளம்பு என்ற சொல்லை தான் கொசுவுக்கு பயன்படுத்துவோம்). நான் இங்க கொசு வத்தி வச்சி, கரண்ட்ல வேலை செய்யிறதும் வச்சி, போதாகுறைக்கு, கை கால் எல்லாம் கிரீம் உம் பூசிட்டுத்தான் படுக்கிறன் ஹிஹி… முடியல!!

  Liked by 1 person

  • mahalakshmivijayan சொல்கிறார்:

   உபரி தகவலுக்கு நன்றி! நுளம்பு என்று முதன் முறையாக கேள்வி படுகிறேன்… அப்பப்பா இந்த கொசுவிடமிருந்து தப்பிக்க எத்தனை எத்தனை உபயோகிக்கிறாய்! கொசு வலை பயன்படுத்த பழகு! அதுவே ஆரோக்கியத்திற்கு நல்லது 🙂

   Liked by 1 person

 3. ranjani135 சொல்கிறார்:

  மிக மிக உபயோகமான பதிவு இது மஹா! எல்லோருக்கும் பயன்படும் இந்தப் பதிவு.
  என்னை மட்டும் ஏன் கொசு கடிக்கிறது என்ற கேள்விக்கு இன்று உங்கள் இந்தப் பதிவில் (குண்டு!) பதில் கிடைத்தது. எய்ட்ஸ் கொசுக்கடியினால் பரவாது என்ற தகவலும் ஆறுதலைக் கொடுத்தது.
  நிறைய நிறைய தெரிந்து கொண்டேன். நன்றி!மஹாவா? கொக்கா?

  Liked by 1 person

  • mahalakshmivijayan சொல்கிறார்:

   வாங்க ரஞ்சனி அம்மா.. இந்த கொசு யாரை தான் விட்டு வைக்குது! எல்லோரையும் தான் பதம் பார்க்கிறது.. உடல் பருமனாக இருப்பவர்களை கடிப்பதற்கு கொசுவுக்கு வசதியாக இருக்குமோ என்னவோ 🙂 வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அம்மா 🙂

   Like

 4. chollukireen சொல்கிறார்:

  ஹிஸ்டமைன் பற்றித் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நான் இரண்டுநாள் கழித்து படிக்கிறேன். இன்று தொடர்ந்து வரும் பட்டனை அழுத்தி இருக்கிறேன்
  சென்னை கொசுமாதிரி மும்பையில் இல்லை. விவரம் எல்லோருடய வரவேற்பையும் பெரும். அழகாக எழுதியுள்ளாய். அன்புடன்

  Like

  • mahalakshmivijayan சொல்கிறார்:

   வாங்க காமாட்சி அம்மா! நீங்கள் இந்த வலைத்தளத்தை தொடர்ந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி! இன்னும் நிறைய நிறைய தரமான பதிவுகளை பதிய முயற்சிக்கிறேன்! வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி 🙂

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s