அடுப்படியில் இருக்கும் பிசாசு

images (7)

பிசாசு படத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! இது வேறு மாதிரியான பிசாசு.. இவை கண்ணுக்கு புலப்படுவதில்லை! ஆனால் நிமிடத்தில் நம்மை சாய்த்து கொல்லும் திறனுடையது! அது என்ன வகை பிசாசு என்று தெரிந்து கொள்ள கொஞ்சம் பொறுமையா மேலே படியுங்கள்…

நம் வீடுகளில் நாம் சமையல் செய்ய உபயோகிக்கும் எரிவாயு அடுப்பு (Gas Stove ) யாவரும் அறிவர். திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டரை(LPG ) அடுப்புடன் இணைத்து நாம் நமக்கு வேண்டிய உணவு வகைகளை சமைத்து உண்கிறோம்.

indane-installation

எரிவாயு அடுப்பு எப்படி வேலை செய்கின்றது என்று முதலில் பார்க்கலாம். நாம் அடுப்பை ஆன் செய்தவுடன் சிலிண்டரிண் உள்ளே அழுத்த நிலையில் அடைத்து வைக்க பட்டிருக்கும் சமையல் எரிவாயு ரப்பர் குழாய் வழியாக அடுப்பை அடைந்து பர்னரை நோக்கி செல்கின்றன. அவ்வாறே பயணப்படும் எரிவாயு ஒரு கட்டத்தில் காற்றுடன் கலக்க ஆரம்பிக்கும். அவ்வாறு காற்றுடன் கலப்பதனாலே தான் வத்திகுச்சி அல்லது எரிவாயு விளக்கேற்றி(Gas Lighter) மூலம் அடுப்பை பற்ற வைக்கும் போது நீல (Blue Flame ) நிறத்தில் எரிகிறது!

images (8)

இவ்வாறு நீல நிறத்தில் அடுப்பு சுடர் விட்டு எரிவதே சிறந்தது. ஒரு வேளை அடுப்பில் எரியும் சுடரானது மஞ்சள் நிறத்தில் எரிந்தால் அல்லது பர்னர் பற்ற வைத்ததும் சத்தம் போடுவது இவ்வாரெல்லாம் நடந்தால் எரிவாயு சுடர்(gas flame) குழாய்களுக்குள் மாட்டி கொண்டு விட்டது என்று அர்த்தம்! அப்பிரச்சனையை தீர்க்க ஒரு முறை அடுப்பை ஆப் செய்து விட்டு திரும்ப ஒரு தடவை அடுப்பை பற்ற வைப்பது பிரச்னையை தீர்க்க உதவும் சரியான அளவு காற்று எரிவாயுவுடன் கலக்கும் போது நாம் விருப்பப்பட்டது போலே சுடரானது நீல நிறத்தில் சுடர் விட்டு எரிகிறது.

gas-burner-yellow-flame_mini

சரியான அளவு காற்று எரிவாயுவுடன் கலக்காத பட்சத்தில் சுடரானது மஞ்சள் நிறத்தில் எரிகிறது! இவ்வாறு மஞ்சள் நிறத்தில் எரிவது அவ்வளவு நல்லது இல்லை.. சுடர் மஞ்சள் நிறத்தில் எரிவதற்கு இன்னொரு காரணமும் சொல்ல படுவதுண்டு. அது என்னவெனில் அடுப்பின் பர்னரின் உள்ளே சேர்ந்திருக்கும் புகைக்கரியினால்!! அவ்வப்பொழுது இந்த பர்னர்களை கொதிக்கும் கடுங்கார நீரில் (Lye ) கழுவி அடைந்திருக்கும் ஓட்டைகளை சுத்தம் செய்து பின் அடுப்பினில் பொருத்துவது நலம் பயக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு சுத்தமாக அடுப்பு பேணி பாதுகாக்க படுகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது…

சரி சரி நிறுத்து! என்ன பேய், பிசாசு ஒன்றையும் காணவில்லை! எப்பதான் அவற்றை பற்றி சொல்ல போகிறாய் என்று நீங்கள் பரபரக்கும் அவசரம் புரிகிறது! இதோ வந்து விட்டது நான் சொன்ன பிசாசு! அதன் பெயர் கார்பன் மோனாக்சைட் (CO ) இது ஒரு விஷவாயு.. இந்த விஷ வாயு பிசாசானது எப்பொழுது எல்லாம் வெளியே வரும் , எப்படி வரும் என்பதை தெரிந்து கொள்ளுவது நல்லது. இந்த விஷவாயு கண்ணுக்கு புலப்படாது, வாசனை அறிய முடியாது. இது எரிவாயுவை எரிக்கும் போது வெளிவரும் ஒரு வாயு! இந்த விஷ வாயு வெளிவரும் அளவு நாம் எரிக்கின்ற எரிவாயுவின் எரியும் திறனை பொருத்தது. நாம் நம் வீட்டு அடுப்பை ஒழுங்காக பராமரிக்கும் வரை, அதாவது அடுப்பில் எரியும் சுடர் நீல நிறத்தில் காணப்படும் பொழுது நம் அடுப்பு எரிவாயுவை நல்ல திறனோடு எரிக்கும் , விஷவாயு வெளிவரும் அளவும் கம்மியாக இருக்கும்.. அதனால் பெரிய பாதிப்பு ஒன்றும் வராது! ஆனால் அடுப்பின் பராமரிப்பு சரி இல்லாமல் போகும் பொழுது அதாவது அடுப்பில் எரியும் சுடர் மஞ்சள் நிறத்தில் காணப்படும் பொழுது இந்த விஷ வாயு வெளி வரும் அளவு கூடி , அடுப்பின் அருகே நின்று கொண்டிருக்கும் மனிதர்களை நிமிடங்களில் தாக்கி கொன்று விடும்.

download (2)

இந்த விஷவாயு (CO ) தாக்கியதற்கான அறிகுறிகளை இப்பொழுது பார்க்கலாம். ஆரம்ப அறிகுறிகள் சளி காய்ச்சல்(flu ) போல இருக்கும் ஆனால் காய்ச்சல் எதுவும் வெளியே தெரியாது. மேலும் தீராத தலைவலி, சோர்வு, மூச்சு திணறல் , குமட்டல் ,தலைச்சுற்று , வாந்தி ,தன்னிலையிழத்தல் , உணர்வு இழப்பு போன்றவை ஏற்படும் . மருத்துவ ரீதியாக சொல்வதென்றால் இந்த விஷவாயுவானது(CO ) நம் இரத்தத்தில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள ஹீமோகுளோபினுடன் அட்டை போல ஒட்டி கொண்டு, பிராண வாயுவை நம் உடம்பில் உள்ள எல்லா பாகங்களுக்கு வழங்க முடியாதபடி செய்து விடுகிறது! இதற்கு நமக்கு நாமே செய்து கொள்ளும் முதலுதவி அவ்விடத்தை விட்டு காலி செய்து நல்ல தூய்மையான காற்று நம் முகத்தில் படுமாறு செய்வது.. அதன் பிறகு ஒரு நல்ல மருத்துவரை அணுகி இந்த நச்சு அறிகுறிகளை எடுத்துரைத்து தகுந்த சிகிச்சை பெற்று கொள்வது நல்லது!!

Carbon Monoxide Awareness Banner

This entry was posted in வேதியியல் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

20 Responses to அடுப்படியில் இருக்கும் பிசாசு

 1. Jenil சொல்கிறார்:

  Good info akka

  Like

 2. பயனுள்ள தகவல்… நன்றி…

  Liked by 1 person

 3. RajalakshmiParamasivam. சொல்கிறார்:

  CO பற்றிய விவரங்கள் அருமை மஹா. கேஸ் ஸ்டவ் மஞ்சள் கலரில் எரியும் மர்மம் வெளியானது. நன்றி.
  CO பற்றி நீங்கள் சொல்லும் போது தோன்றியது…..
  ஏசி அறையில் Open Flame (candle etc….) ஏன் இருக்கக் கூடாது?
  ஏசி கார் ஜன்னல் glassஐத் திறக்காமல் அதிக நேரம் அதில் உள்ளிருந்து பிரயாணம் செய்வதால் நாம் எதிர் நோக்கும் ஆபத்துப் போன்றவைகளைப் பற்றிய விழிப்புணர்வுப் பதிவு ஒன்றை வெளியிடுங்களேன் மஹா . பலருக்கும் உபயோகமாயிருக்கும் . This is just my request ,nothing more ..

  Liked by 2 people

 4. பரிமாணம் சொல்கிறார்:

  ஐ, உங்கள் வலைப்பதிவகத்தை கண்டு கொண்டதில் மகிழ்ச்சி. அப்படியே இண்டக்சன் அடுப்பு, மைக்ரோவேவ் அடுப்புகளைப் பத்தியும் சொல்லுங்க! 🙂
  – சரவணா

  Like

 5. PRABUWIN சொல்கிறார்:

  அருமையான ஒரு பதிவு. தெரிந்து கொள்ள எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றது.அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.
  தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி.
  இலங்கைத் தமிழ் மக்கள் சார்பாக என்னுடைய நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  Like

 6. அருமை அருமை! தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மேடம்!

  Liked by 1 person

 7. chollukireen சொல்கிறார்:

  காஸ் உபயோகிக்கிரோமே தவிர இவ்வளவு விஷயங்கள் காரணத்துடன் தெரியாது.
  விசேஷமாக எல்லா விஷயங்களையும் தெளிவாகச் சொல்லிஇருக்கிராய்.
  எந்த பொருளானாலும் அதற்கென சில விஷயங்களும்,சரித்திரமும் இருக்கிறது.
  பயனுள்ள தகவல்கள். நல்ல உதவி. வாழ்த்துகள். அன்புடன்

  Like

  • mahalakshmivijayan சொல்கிறார்:

   ஆம் காமாட்சி அம்மா! இவ்வுலகில் நமக்கு தெரிந்த விஷயங்களை விட தெரியாத விவரங்கள் எவ்வளவோ இருக்கின்றன! அடுப்படியில் பணியாற்றும் எவருக்கேனும் இவ்விவரங்கள் உடல் நலம் காக்க உதவுமே என்று தான் பதிவேற்றினேன் 🙂

   Like

 8. பிங்குபாக்: தூ…….தூ…….போ……போ………!  | ranjani narayanan

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s