மின் விசிறிக்கு என்ன ஆச்சு??

images (4)

நேற்று வரை நல்லா ஓடி கொண்டிருந்த மின் விசிறி திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் எனக்கு என்ன என்று நின்று விட்டதா?? உடனே என்ன செய்வார்கள், எலக்ட்ரீஷியனை அவசர அவசரமாக அழைத்து , யப்பா… ஏதாவது பண்ணுப்பா.. உனக்கு புண்ணியமா போகும்.. புழுக்கம் தாங்கலை… என்று அங்கலாய்ப்பார்கள்! அவரும் மின் விசிறியை தொட்டு கூட பார்க்காமல் சொல்லுவார்.. Capacitor போயிருக்கும்! அப்படி சொல்லவில்லை என்றால் அடுத்ததாக அவர் உபயோகிக்கும் வார்த்தை.. காயில் எரிந்து போயிருக்கும்! இப்போ நான் கேட்குர கேள்விக்கு பதில் சொல்லுங்க .. என்னைக்காவது அப்படி என்றால் என்ன?? மின் விசிறியினுள்ளே அதன் பயன் பாடு என்ன?? ஒரு தடவையாவது கேட்டு அறிந்ததுண்டா????? உங்கள் பதில் இல்லை என்றால் மேற்கொண்டு படியுங்கள் ..

Fan 2

அதோ அந்த வெள்ளை நிற உருளை படத்தில் இருக்கறதே.. அது தான் மின்தேக்கி (capacitor )! இது என்ன மின்கலமா (Battery) என்று வியப்பவர்களுக்கு சொல்லுகிறேன்.. இது மின்கலம்(Battery) அல்ல ஆனால் மின்கலம் (Battery)மாதிரி.. ஆமாம்,  மின்தேக்கியிலும்(capacitor)  மின்கலம் (Battery) போன்று சார்ஜ் ஏற்றி வைத்து கொள்ளலாம். இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் ஒன்றே ஒன்று தான்!மின்கலம்(Battery) உபயோகம் செய்ய செய்ய காலி ஆகும்.  மின்தேக்கியோ (Capacitor) உபயோகித்த மறுநொடியே தான் சேமித்து வைத்த அத்தனை சார்ஜையும் காலி செய்து விடும் இயல்புடையது .

flashgun

இந்த  மின்தேக்கியை (capacitor) எளிதாக புரிந்து கொள்ள நாம் Flash Camera வை பற்றி சிறிது நேரம் பார்க்கலாம். கேமராவின்னுள்ளே  ஒரு மின்தேக்கி(capacitor), கேமராவின்  Flash Gun னோடு  பொருத்தப்பட்டிருக்கும்! அந்த மின்தேக்கியானது புகைப்படம் எடுக்கும் முன்னே கேமராவின் பேட்டரியின் துணை கொண்டு முழுதும் சார்ஜ் ஆகி புகைப்படம் எடுக்க எத்தனிக்கும் அந்த வேளையில், தனது சக்தியை பெருவாரியான வெளிச்ச வெள்ளமாக flash bulb மூலமாக உமிழ்ந்து பளிச் என்ற புகைப்படத்தை எடுக்க உதவுகிறது!

electrolytic-capacitor-icon-symbol-27014451

 

இயற்கையில் காணக்கிடைக்கும் ஒரு மின்தேக்கியை பற்றி இப்போ விவரிக்க போகிறேன்… புயல் மேகம் மின்தேக்கியின் ஒரு தகடாக செயல்பட, பூமியானது மற்றொரு தகடாக செயல்பட அவ்விரண்டுக்கும் இடையே திடீரென்று கண்ணை பறித்து கொண்டு பளிச் என்று வெளிபடுமே மின்னல்! அட ஆமா.. என்று நீங்கள் சொல்வது என் காதில் விழாமல் இல்லை…
20849_1600x1200-wallpaper-cb1275419114

சரி சரி போதும் உன் கிளை கதைகள், மின் விசிறிக்கும் இந்த மின்தேக்கிக்கும் என்ன சம்பந்தம்  என்று சட்டுபுட்டுனு சொல்லிட்டா நாங்களும் எங்க வேலையை பார்ப்போம் இல்லையா என்று நீங்கள் புலம்புவது காதில் விழாமல் இல்லை. இதோ நானும் முடிவை நெருங்கி விட்டேன்… நம் வீடுகளுக்கு குடுக்க படுவது ஒற்றை தருவாய் மின்னோட்டம் (single phase current) ..     இத்தகைய ஒற்றை தருவாய் மின்னோட்டத்தில் மின்விசிறியால் தானாக சுற்ற ஆரம்பிக்க இயலாது. அதாங்க.. Starting  Trouble .. என்று சொல்லுவார்களே.. அதே தான் இங்கேயும்.  இதற்கு தக்க நேரத்தில் தான் தேக்கி வைத்த மின் சக்தியினால் அதிகப்படியான மின்சாரத்தை குடுத்து  மின்விசிறியின் மோட்டாருக்கு ஒரு தொடக்கத்திருக்கம் (starting torque ) குடுத்து உதவுவது தான் இந்த மின்தேக்கி (capacitor ).  அதுமட்டுமில்லாது  நம் வீடுகளுக்கு குடுக்கப்படும்  ஒற்றை தருவாய் மின்சாரத்தை இரட்டை கட்டமாக  மாற்றி மின்விசிறியின் தடையில்லாத ஓட்டத்துக்கு துணை  புரிவதே இந்த மின் தேக்கியின் தலையாய வேலை!

 

This entry was posted in மின்னியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

24 Responses to மின் விசிறிக்கு என்ன ஆச்சு??

 1. Pandian சொல்கிறார்:

  இதென்ன புதிய தளமாக உள்ளதே?

  Like

 2. ranjani135 சொல்கிறார்:

  புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள். ஆங்கில வார்த்தைகளுக்கு அழகான தமிழ் வார்த்தைகள் பயன்படுத்தியிருக்கிறீர்களே, எங்கிருந்து இந்த வார்த்தைகள் கிடைக்கின்றன? கொஞ்சும் தமிழில் அறிவியல் தளம். வாழ்த்துக்கள்!

  Like

  • mahalakshmivijayan சொல்கிறார்:

   http://www.thozhilnutpam.com/chollagaraathi.htm
   இது தான் அந்த தளம் அம்மா! வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி அம்மா 🙂

   Like

   • பரிமாணம் சொல்கிறார்:

    அருமை அருமை, இதுதான் எனக்கும் தேவை, நிறைய இயற்பியல் சொற்களுக்கு தமிழ் பதம் கண்டுபிடிப்பதென்பது மிகச்சிரமமாக இருக்கிறது. இந்த லிங்க்இற்கு முக்க நன்றி! 🙂

    Like

   • mahalakshmivijayan சொல்கிறார்:

    வணக்கம் சரவணன் சார்.. உங்களையும் உங்கள் தளத்தையும் கண்டு கொண்டதில் மிக்க மகிழ்ச்சி! நான் குறிப்பிட்டு இருக்கும் லிங்க் நல்ல லிங்க் தான் ஆனால் அதை விட சுலபமான வழி ஒன்றும் இருக்கிறது ! கூகிளில் சென்று எந்த ஒரு ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் வேண்டுமோ அந்த ஆங்கில வார்த்தையை தட்டச்சு செய்து அதன் கூடவே Translation in tamil என்று அடித்து தேடினால் உடனே அதற்கான தமிழ் வார்த்தை உங்கள் மானிட்டரில் உடனே பளிச்சிடும் 🙂

    Liked by 1 person

   • பரிமாணம் சொல்கிறார்:

    *மிக்க 🙂

    Like

   • பரிமாணம் சொல்கிறார்:

    சார் எல்லாம் வேணாம் அக்கா, நான் சின்ன பய்யன் தான், நானும் இப்ப அப்படித்தான் பயன் படுத்துகிறேன், அதிலும் கூகிள் குரோம் இற்கு கூகிள் மொழி மாற்றியின் addon கிடைக்கிறது. ஆங்கில வார்த்தையை இரட்டை கிளிக் செய்தால் உடனே சிறிய பெட்டியினுள் தமிழில் அர்த்தம் பார்க்கலாம் 🙂
    https://chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en

    ஒரு குறிப்பு: addon செட்டிங்க்ஸ்குள் சென்று பிரதான மொழியாக தமிழை தெரிவுசெய்து கொள்ளுங்கள்!

    Liked by 1 person

   • mahalakshmivijayan சொல்கிறார்:

    மிக்க நன்றி சரவணா! நீ கொடுத்திருக்கும் லிங்க் எனக்கு ரொம்பவே உபயோகமாக இருக்கும்! உன் உதவிக்கு நன்றி 🙂

    Liked by 1 person

 3. RajalakshmiParamasivam. சொல்கிறார்:

  Starting torque கொடுத்து Starting trouble ஐ தடுக்கும் வேலையைத் தான் capacitor செய்கிறது என்பதை மிக விரிவாக விளக்கமாக ,அழகிய உதாரணங்களுடன் அசத்தி விட்டீர்கள். From Known to Unknown என்று அருமையாய் கொண்டு சென்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
  இது சரி. அடுத்தது என்ன? அறிய ஆவல்………. உங்களைத் தொடர்கிறேன்…
  நன்றி……

  Like

  • mahalakshmivijayan சொல்கிறார்:

   என் தளத்தை பின் தொடர்வதற்கு மிக்க நன்றி மேடம்! அதற்கு தகுந்த மாதிரி நல்ல தரமான பதிவுகளை கண்டிப்பாக பதிவேற்றுவேன்! அடுத்த பதிவு நாம் அன்றாடம் உபயோகிக்கும் சோப்பை பற்றியது.. விரைவில் வெளி வரும் 🙂

   Like

 4. ஒவ்வொரு விளக்கமும் மிகவும் அருமை…

  தொடர வாழ்த்துக்கள்…

  Like

 5. vijikumari சொல்கிறார்:

  நான் ஒரு கணித பௌதிக ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றுள்ளேன். நான் ஆங்கிலத்தில் நடத்திய பாடங்களை தமிழில் படிக்கப்போகிறேன் என்பது புது உற்சாகத்தை அளிக்கிறது வெளுத்துக்கட்டுங்கள் மஹா ஆரம்பமே வெகு வேகமாக சுழல ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சியக் கொடுக்கிறது.

  Like

  • mahalakshmivijayan சொல்கிறார்:

   எனக்கு அறிவியலின் மேல் பெரிய மரியாதை உண்டு … ஆனால் அதை புரிகிற மாதிரி சொல்லி கொடுக்கும் ஆசிரியர் வெகு சிலரே… அத்தகைய ஆசிரியர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவே தளத்தை ஆரம்பித்து உள்ளேன்… நன்றாக வரும் என்ற நம்பிக்கையோடு அடுத்த பதிவுக்கு தயாராகி விட்டேன்.. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி மேடம் 🙂

   Like

 6. mahalakshmivijayan சொல்கிறார்:

  Reblogged this on எண்ணங்கள் பலவிதம் and commented:
  இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் என்ற பெயரில் புதிய தளம் ஆரம்பித்திருக்கிறேன்! இதில் எளிய தமிழில் அறிவியலை யாவரும் புரிந்து கொள்ளும் படியாக பதிவுகளை பதிந்து கொண்டிருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள் நண்பர்களே…

  Like

 7. அறிவியல் பயணம் அமர்க்களமாய் ஆரம்பமாகி விட்டது போலிருக்கிறது! அருமை அருமை மேடம்!

  Like

  • mahalakshmivijayan சொல்கிறார்:

   மிக்க நன்றி ஆறுமுகம் சார்! ஏதாவது செய்யணும், அதில் மனதிருப்தி அடைய வேண்டும் என்ற நினைப்பில் ஆரம்பிக்க பட்டதே இந்த தளம்! தொடர்ந்து ஆதரவு தந்து நான் இடும் பதிவுகளில் உள்ள நிறை குறைகளை தெரிவியுங்கள்.. நன்றி 🙂

   Like

 8. yarlpavanan சொல்கிறார்:

  சிறந்த பதிவு
  தொடருங்கள்

  Like

 9. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் மஹாலக்ஷ்மி விஜயன்.

  உங்களுக்கு மிக எளிமையாகவும், அதே சமயம்
  அழகாகவும், மிகத் தெளிவாகவும் எழுத வருகிறது.
  மிக நல்ல முயற்சி. உங்களுக்குள் இருக்கும்
  திறமைகளை, மற்றவர்களுக்குப் பயன்படும் விதத்தில்
  இந்த வலைத்தளம் வெளிக்கொண்டு வரும்.
  தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துக்கள்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  Liked by 1 person

  • mahalakshmivijayan சொல்கிறார்:

   வாங்க காவிரிமைந்தன் சார்.. என் வலைதளத்தை பார்த்து நீங்கள் கொடுத்த விமர்சனம் மனதுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுக்கிறது. மேலும் நிறைய நல்ல பதிவுகளை கண்டிப்பாக இத்தளத்தில் பதிவேன் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது ! உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் மிக்க நன்றி 🙂

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s